தமிழ்நாட்டிற்கும், தேசத்திற்கும் பெருமை சேர்த்த விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

10:19 AM (IST) Oct 02
மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிற வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலமாக பயனடைந்து கொண்டு வருவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், விடுபட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் என்கிற வாய்ப்பை அரசு வழங்கியிருப்பதாக கூறினார்.
08:53 AM (IST) Oct 02
நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லி ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
07:51 AM (IST) Oct 02
பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகள் வருகின்றன. அந்த வகையில் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில் விற்பனை விலையானது குறைந்தும், இஞ்சியின் வரத்து குறைவாக இருப்பதால் விற்பனை விலை உயர்ந்தும் விற்பனை செய்யப்படுகிறது.
07:50 AM (IST) Oct 02
சென்னை கோடம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம் ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.