Rajbhavan : ஆளுநர் மாளிகையில் குண்டு வெடிக்கும்.. 100க்கு வந்த மிரட்டல் போன்- மர்ம நபரை தட்டித் தூக்கிய போலீஸ்

By Ajmal Khan  |  First Published May 31, 2024, 11:52 AM IST

ஆளுநர் மாளிகையில் குண்டு வெடிக்கும் என போலீஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 


ஆளுநர் மாளிகை - வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கிண்டி பகுதியில் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் உள்ளது. இங்கு ஆளுநர் ரவி தனது குடும்பத்தோடு உள்ளார். இந்தநிலையில், ஆளுநர் மாளிகையில் குண்டு வைத்திருப்பதாகவும், அந்த குண்டு எந்த நேரத்திலும் வெடித்து விடும் என மர்ம நபர் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து ஆளுநர் மாளிகையை போலீசார் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர் மேலும் கூடுதல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tap to resize

Latest Videos

undefined

Velladurai : என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை பணி ஓய்வு நாளில் திடீர் சஸ்பெண்ட்..! காரணம் என்ன.?

மர்ம நபர் யார்.?

இதனையடுத்து குண்டு வைத்திருப்பதாக கூறப்பட்ட தகவல் புளரி என தெரியவந்தது. அதே நேரத்தில் ஆளுநர் மாளிகைக்கு மிரட்டல் விடுத்த நபரின் தொலைபேசி எண்ணை வைத்து தீவிரமாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தேவராஜ் என தெரியவந்தது. இதனையடுத்து தேவராஜை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. 

வெயில் சுட்டெரிக்குது.!!பள்ளிகள் திறப்பதை இரண்டு வாரத்திற்கு தள்ளி போடுங்க.. அரசுக்கு கோரிக்கை விடுத்த ராமதாஸ்

click me!