Seeman : பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் காட்டுத் தீ.!! சுற்றுச்சூழலை பாதுகாக்க என்ன நடவடிக்கை.? சீமான் கேள்வி

By Ajmal Khan  |  First Published May 31, 2024, 10:22 AM IST

காட்டு தீயால்  சதுப்புநிலப் பகுதிகளும், பறவைகளின் உறைவிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வரும் நிலையில், இக்காட்டுத்தீயிற்கானக் காரணிகளைக் கண்டறிய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். 
 


சதுப்பு நிலத்தில் காட்டுத்தீ

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் காட்டுத்தீ ஏற்பட்டதையடுத்து அந்த பகுதி முழுவதும் புகைமண்டலாக காட்சி அளிக்கிறது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடும் வெயிலின் காரணமாகவே புற்கள் காய்ந்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த காட்டுத் தீ தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கரணை (பெரும்பாக்கம்) சதுப்பு நிலப்பகுதியில் நேற்று (30.05.2024) ஏற்பட்ட காட்டுத்தீ முழுவதுமாக அணைக்கபட்டதை உறுதி செய்வதோடு பொதுமக்களையும், சூழலியலையும் பாதுகாத்திட துரித நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

பறவைகளின் உறைவிடம் பாதிப்பு

மேலும்  சதுப்புநிலப் பகுதிகளும், பறவைகளின் உறைவிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வரும் நிலையில், இக்காட்டுத்தீயிற்கானக் காரணிகளைக் கண்டறிய வலியுறுத்துகிறேன். குப்பை மேட்டின் தன்மை போன்ற மானுடவியல் காரணிகளாக இருப்பின் போர்க்கால அடிப்படையில் அரசு எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று பொதுமக்கள் உற்று நோக்க வேண்டுகிறேன்.  

பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் மற்றும் அருகாமையில் இருக்கக்கூடியக் குப்பைக்கிடங்கிலிருந்து வெளியேறும் வேதிமப்பொருட்கள் ஆகியவற்றால் ஏற்படும் சூழலியல் சீர்கேடுகள் குறித்துத் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது இந்தக் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இழந்த சதுப்புநிலப் பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் இனியாவது காலம் கடத்தாமலும், ஊழலின்றியும் அரசு ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

Velladurai : என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை பணி ஓய்வு நாளில் திடீர் சஸ்பெண்ட்..! காரணம் என்ன.?

click me!