
மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் பேட்டியளிக்கையில்: நேற்றைய தினம் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபுவிற்கு இந்து முன்னணி சார்பாக முருக பக்தர் மாநாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர் வருவார் என்று எங்களுக்கு தோன்றவில்லை. ஆனால் அவர் தொந்தரவு பண்ணக்கூடாது என்று எதிர்பார்க்கின்றோம். திமுகவை பொருத்தவரை எங்களது எதிர்பார்ப்பு என்னவென்றால் இந்துக்களுக்கு அவர்கள் உதவி செய்ய வேண்டாம். தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்பது தான் திமுகவினரிடம் நாங்கள் எதிர்பார்ப்பது.
நாங்கள் பலமுறை சொல்லி இருக்கின்றோம் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல முருகன் மாநாடு நடத்தினால் என்ன அவர் என்ன பிஜேபி காரரா இல்லை மிஸ்டு கால் கொடுத்து தான் அவர் பிஜேபியில் இணைந்தாரா? நீங்களும் தான் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தினீர்கள். அதை நாங்கள் வரவேற்றும் திமுக மாநாடு என்று நாங்கள் ஒருபோதும் அதை கொச்சைப்படுத்தவில்லை. அதேபோல இந்து முன்னணி தற்போது இந்த மாநாட்டை நடத்துகிறது. பாரதிய ஜனதா கட்சி நடத்துகிற மாநாடு அல்ல ஊடகங்கள் வாயிலாக நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம்.
பிஜேபி அந்த மாநாட்டிற்கு உதவி செய்கிறது அவ்வளவுதான். கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உதவி செய்ய திமுக காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இருக்கிறது. சிறுபான்மையினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நிபந்தனையற்ற உதவி செய்வதற்கு அவர்கள் இருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் வைகோ அவர்கள் எந்த சிறுபான்மையினரை தொட வேண்டும் என்றாலும் எனது பிணத்தின் மீது நடந்து போய் தான் நீங்கள் அவர்களை தொட முடியும் என்று சொன்னார். யாரும் அவரை காயப்படுத்தவில்லை அவராகவே கற்பனை செய்து கொண்டு காற்றில் அரிவாள் சுற்றுவது போல அவர் செய்தார். அப்படியெல்லாம் பேசுவதற்கு ஆள் இருக்கிறது. ஆனால் இந்துக்களுக்கு ஒன்று என்றால் கேட்பதற்கு நாதி இல்லை
அதனால் பாஜக அந்த இடத்தில் களத்தில் நிற்கிறது. மற்ற கட்சிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டால் பாஜக இவ்வளவு ஆர்வம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதனால் நாங்கள் களத்தில் சென்று அதிமுக காங்கிரஸ் திமுக என அனைவரையும் அழைக்கின்றோம். அதன் அடிப்படையில் தான் அமைச்சர் சேகர்பாபுவையும் அழைத்தும் ஆனால் திமுக தொடர்ந்து இதற்கு எதிராகத்தான் இருக்கிறது. இது சங்கீகள் மாநாடு என்று சொல்கிறது முருகன் இவ்வாறுதான் செய்யச் சொன்னாரா? என்று கேட்பதும் நீங்கள் எத்தனை பால்காவடி எடுத்தாலும் உங்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை நாங்கள் ஒன்றும் இதை நம்பியோ ஓட்டு கேட்கவில்லை எந்த ஒரு அரசியல் தீர்மானமும் இந்த முருகன் பக்த மாநாட்டில் நிறைவேற்றப்பட போவதில்லை என ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம். எங்கள் தலைவர்களை மேடையில் அமருவார்கள் என்று தான் சொல்லியிருக்கிறோம்.
அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்ற போவதில்லை என்று ஏற்கனவே சொல்லி இருக்கின்றோம். நாங்கள் சொன்ன விளக்கத்தை உயர் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால் திமுக அரசு காவல்துறையினர் மூலம் அதிக கெடுபிடி விதிக்கிறது. தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் மாநாடு நடத்துகின்றன கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் மாநாடு நடத்தும் போது கூட குறிப்பாக முஸ்லிம் லீக் மாநாடு நடத்தும்போது கூட இது போன்ற கெடுபிடி கிடையாது.
நிகழ்ச்சி நடத்தும் அமைப்பாளர்களுக்கு பயங்கரமான கேள்விகள் கேட்கப்படுகிறது. எந்த ஊரில் இருந்து எத்தனை பேர் வருவார்கள் எத்தனை வாகனங்களில் வருவார்கள் எப்படி வருவார்கள் என்ற கேள்வி கேட்கிறார்கள். வருபவர்களுக்கு நாங்கள் திமுகவை போன்று குறிப்பாக உடன்பிறப்புகளுக்கு பணம் கொடுத்து வாகனங்களை ஏற்பாடு செய்திருந்தால் எத்தனை வாகனங்களில் வருவார்கள் என்ற தரவுகளை எங்களால் கொடுக்க முடியும். தமிழக மட்டுமல்ல பல்வேறு பகுதிகளில் இருந்து தன்னெழுச்சியாக அவருடைய சொந்த பணத்தை போட்டு வாகனங்களை பிடித்து வருபவர்கள் எண்ணிக்கை எங்களால் எப்படி கூற முடியும்.
மாநாட்டிற்கு வருபவர்களில் எத்தனை ஆண்கள் எத்தனை பெண்கள் எத்தனை முதியவர்கள் எவ்வளவு குழந்தைகள் வருவார்கள் இப்படி கேட்கும் இவர்கள் இதற்கு முன்னர் மற்றவர்கள் நடத்தும் மாநாட்டில் கேட்டிருக்கிறார்களா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்துக்கள் மாநாடு என்பதால் கேட்கிறார்கள். பெரும்பான்மை இந்துக்களுக்கு தனி சலுகை தனி உரிமை கேட்கவில்லை நாங்கள் தமிழ்நாட்டில் சிறுபான்மை சமூகத்திற்கு இருக்கக்கூடிய அதே சலுகையின் முக்கியத்துவத்தையும் பெரும்பான்மையினருக்கும் கொடுங்கள் என்று தான் கேட்கிறோம் இதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு கண்ணில் சுண்ணாம்பு மரு கண்ணில் வெண்ணையும் ஏன் வைக்கிறீர்கள் முருக பக்தர்கள் மாநாடு நடத்தக் கூடாதா? இந்து முன்னணிக்கு அந்த உரிமை இல்லையா?
திருமாவளவன் வர வர கமல்ஹாசனை போல பேச ஆரம்பித்து விட்டார். முன்பெல்லாம் சரியாகத்தான் பேசிக் கொண்டிருந்தார் தற்போது கமல்ஹாசன் அவர்களது கூட்டணியில் சேர்ந்த பிறகு கமல்ஹாசனோடு சாவகாசம் வைத்திருந்தால் அவர் பேசுவது கூட புரியவில்லை நமக்கு. திமுக கூட்டணியை விட்டு திருமாவளவன் வருவாரா மாட்டாரா அதிமுகவில் சேர்வாரா மாட்டாரா என்கின்ற ஒரு நிலையில் தான் தற்போது கமல்ஹாசனுடைய சவகாசம் வைத்ததால் அவருடைய நிலைமை அப்படி ஆகிவிட்டது. சமீபகாலமாக அனைவருமே மதுரைக்குத்தான் வருகிறார்கள் திமுக உடைய பொதுக்குழு கூட்டமும் மதுரையில் தான் நடந்தது அதன் அடிப்படையில் தற்போது திருமாவளவன் மதுரைக்கு வந்து செல்கிறார். கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்த திருமாவளவன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கோவிலில் உள்ள சிலைகள் ஆபாசமாக இருந்தால் அது இந்து கோவில் என்று சொன்னார்.
திருப்பரங்குன்றம் வருகை தந்து முருகப்பெருமானுடைய கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த திருமாவளவனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அவரிடம் ஒரு கேள்வி இருக்கிறது. நீண்ட தூரத்தில் இருந்து பாருங்கள் ஆபாசமான சிலைகள் இருந்தால் அது இந்து கோவில் என்று அர்த்தம் என்று ஒரு கூட்டத்தில் பேசி கைதட்டில் வாங்கிச் சென்றார் அதை ஏன் செய்ய வேண்டும். அப்போது செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடும் வண்ணம் கோவிலுக்கு வந்துள்ளாரா. யாருடைய மத உணர்வையும் புண்படுத்தக் கூடாது குறிப்பாக இந்துக்கள் என்றாலே அனைவருக்கும் கிண்டலும் கேலியும் என்ற ஒரு நிலையாகிவிட்டது. ஏனென்றால் ஹிந்து ஹிந்துவாக ரியாக்ஷன் கொடுக்க மாட்டான். திருப்பரங்குன்றத்திற்கு சேகர்பாபு வருகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திருமாவளவன் வருகிறார். ஆனால் இந்து முன்னணி சென்றால் மட்டும் பேசு பொருளாகி வருகிறது என்றார்.