ராமேஸ்வரத்தின் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு பிரம்மாண்ட இடத்தில் தற்பொழுது உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுடைய தலைமையில் "என் மண் என் மக்கள்" என்கின்ற ஒரு மாபெரும் பாதயாத்திரைக்கான துவக்க விழா தற்பொழுது நடந்து கொண்டு வருகிறது.
பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலை அவர்கள் இன்று ராமேஸ்வரத்தில் இருந்து பாதயாத்திரை துவங்கி, சென்னையில் அதை நிறைவு செய்ய உள்ளார். தனது இந்த பாதயாத்திரையில், தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும் அக்கறை கொண்ட யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்று ஒரு மாபெரும் அழைப்பை விடுத்துள்ளார் திரு. கே. அண்ணாமலை அவர்கள்.
"பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முன்வைத்த மாற்றத்தினை, மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதிக்கும் எடுத்துச் செல்லும் வகையில், தமிழக பாஜக நடத்தும் "என் மண் என் மக்கள்" என்ற பாதயாத்திரையை இன்று கொடியசைத்து துவங்கி வைக்க உள்ளேன்" என்று அமித்ஷா அவர்கள் தனது ட்விட்டர் பகுதியின் மூலம் தெரிவித்து இருந்தார்.
புதுவையில் வருகின்ற 31ம் தேதி முழு அடைப்பு போராட்டம் - வணிகர்கள் எச்சரிக்கை
அதன்படி இன்று மாலை இந்த மாபெரும் நடை பயணத்திற்கான துவக்க விழா ராமேஸ்வரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா அவர்கள் அண்ணாமலைக்கு தனது வாழ்த்துக்களை கூறியதோடு "தமிழ் என்ற பெயரில் தமிழர்களை, தமிழனை, தமிழை வஞ்சித்து வருகிறது இந்த திராவிட அரசாங்கம்", என்று கடுமையாக விமர்சித்தார்.
"மேலும் செல்கின்ற இடங்களில் எல்லாம் தமிழ்நாட்டை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஸ்டாலினை சேர்ந்தவர்கள்" என்றும் கடுமையாக சாடினார் எச். ராஜா அவர்கள். இன்று ராமேஸ்வரத்தில் துவங்கும் அண்ணாமலையின் இந்த பயணம் சுமார் ஆறு மாத காலம் நீடிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 110 நாட்கள், அவர் பயணம் செய்து ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு செல்லவிருக்கிறார். இதனிடையில் மதுரை, உத்திரமேரூர், ராமநாதபுரம், சிவகங்கை என்று பல இடங்களில் அவர் சிறப்புரை ஆற்ற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து விழுப்புரத்தில் பாமகவினர் மறியல் போராட்டம் - போக்குவரத்து பாதிப்பு