புதுவையில் வருகின்ற 31ம் தேதி முழு அடைப்பு போராட்டம் - வணிகர்கள் எச்சரிக்கை

By Velmurugan s  |  First Published Jul 28, 2023, 6:05 PM IST

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டை இடித்துவிட்டு புதிதாக கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகிற 31ம் தேதி கருப்புக்கொடி ஏந்தி முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.


புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குபேர் அங்காடி என அழைக்கப்படும் பெரிய மார்க்கெட்டை இடித்துவிட்டு 35 கோடி ரூபாய் செலவில் புதியதாக வணிக வளாகம் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு வியாபாரிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்த வாரம் பெரிய மார்க்கெட் புதிய கட்டுமான பணிக்கு அடிக்கள் நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் பெரிய மார்க்கெட் வியாபாரிகளின் ஆலோசனைக் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் பெரிய மார்க்கெட் இடித்துவிட்டு புதியதாக மார்க்கெட் கட்டுவதை எதிர்ப்பது சம்பந்தமாக கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.

Latest Videos

அன்புமணி கைது எதிரொலி; கடலூர் மாவட்டத்தில் பேருந்து சேவை நிறுத்தம் - பொதுமக்கள் அவதி

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சேது செல்வம், புதுச்சேரியில் பெரிய மார்க்கெட் நல்ல நிலையில் உள்ளது. ஆனால் அதை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடித்துவிட்டு மீண்டும் புதிதாக கட்டப் போவதாக அரசு அறிவித்துள்ளது. அப்படி செய்யும் பட்சத்தில் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே பெரிய மார்க்கெட்டை இடிக்காமல் தற்போது உள்ள நிலையிலேயே புதுப்பித்து வழங்க வேண்டும்.

அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து விழுப்புரத்தில் பாமகவினர் மறியல் போராட்டம் - போக்குவரத்து பாதிப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரிய மார்க்கெட்டை இடித்து விட்டு புதிதாக அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற 31ம் தேதி கருப்புக்கொடி ஏந்தி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்த அவர், தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

click me!