புதுச்சேரியில் கஞ்சா, வெடிகுண்டு கலாசாரத்தை கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை மேற்கொண்டார்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பொது மக்களின் அச்சத்தை போக்க காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் காவல் துறையின் தலைமையகத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், டிஜிபி ஸ்ரீனிவாஸ் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் புதுச்சேரியில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாகவும், கஞ்சா, போதை பொருள் மற்றும் வெடிகுண்டு கலாசாரத்தை கட்டுப்படுத்தவும் அதே நேரத்தில் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு சாலையில் ரகளை செய்யும் நபர்களை கண்காணிக்கவும், வெளி மாநிலத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை பாதுகாக்கும் வகையில் இரவு நேர ரோந்து பணிகளை முடுக்கி விடவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தேனி உத்தமபாளையத்தில் கூலித் தொழிலாளி வீட்டில் ரூ.15 லட்சம் திருட்டு - காவல் துறையினர் விசாரணை
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம், போதைப்பொருள், சைபர் குற்றங்கள் தடுப்பது, காவலர்களின் நலன், காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. குற்றவாளிகளின் நடமாட்டங்களை கண்காணிப்பது. கஞ்சா விற்பனையை தடுக்க அனைத்து பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து நெரிசல்களில் காவலர்களை பணியில் அமர்த்தி போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறினார்.
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கோவையில் பழங்குடியின மக்கள் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து கண்டனம்
மேலும் காவல்துறை சிறப்பாக செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. வரும் 7, 8 தேதிகளில் அரசு முறை பயணமாக குடியரசுத்தலைவர் புதுச்சேரி வருகை தர உள்ளார். அப்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. உழவர்கரை நகராட்சி, வில்லியனூர், அரியாங்குப்பம், கொம்யூன்களில் சிசிடிவி கேமிரா வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.