தினமும் கொலை நடக்குது! அதை விட்டுட்டு! பாஜகவினரை கைது செய்வதையே குறியா வச்சிருக்கீங்க! கொந்தளிக்கும் அண்ணாமலை

By vinoth kumar  |  First Published Aug 4, 2024, 1:50 PM IST

இது போன்ற அடக்குமுறைகளால், திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியையோ, முதலமைச்சர் ஸ்டாலினின் கையாலாகாத்தனத்தையோ மறைக்க முடியாது. 


பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க இயலாத முதலமைச்சர், பாஜகவினரை முடக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறார் என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து பொதுக்கூட்டம் கடந்த 1ம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாகவும், அறுவறுக்க தக்க வகையில் பேசியதாக பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து போலீசார் இன்று காலை வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில், திமுக அரசின் இந்த கைது நடவடிக்கைக்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: BJP district president arrest : பாஜக மாவட்ட தலைவரை அதிகாலையில் தட்டித்தூக்கிய போலீஸ்- என்ன காரணம் தெரியுமா.?

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: வடசென்னை மேற்கு பாஜக மாவட்டத் தலைவர் கபிலன் அவர்களைத் தமிழகக் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதற்காக அவரைக் கைது செய்திருப்பதாகத் தெரிகிறது. திமுக அரசின் இந்த பாசிசப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, தினம் கொலைகளும், கொள்ளைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கையில், திமுக தனது அரசியலுக்குக் காவல்துறையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க இயலாத முதலமைச்சர், பாஜகவினரை முடக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்.

இதையும் படிங்க: கடத்தி குடும்பத்தோடு கொல்வோம்! ஆம்ஸ்ட்ராங் மகள், மனைவி உயிருக்கு அச்சுறுத்தல்.. அதிரடி முடிவு எடுத்த போலீஸ்!

இது போன்ற அடக்குமுறைகளால், திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியையோ, முதலமைச்சர் ஸ்டாலினின்  கையாலாகாத்தனத்தையோ மறைக்க முடியாது. பாஜகவினர் மீதான இதுபோன்ற அடக்குமுறைகளைக் கைவிட்டு, மாநில அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கைக் கவனியுங்கள் முதலமைச்சரே. சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது உங்கள் நிர்வாகம் என ஆவேசமாக பதிவிட்டுள்ளார். 

click me!