கடத்தி குடும்பத்தோடு கொல்வோம்! ஆம்ஸ்ட்ராங் மகள், மனைவி உயிருக்கு அச்சுறுத்தல்.. அதிரடி முடிவு எடுத்த போலீஸ்!
சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்திற்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
armstrong
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் ஜூலை 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திமுக, பாஜக, அதிமுக மற்றும் 5 வழக்கறிஞர்கள் உட்பட இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், ரவுடி திருவேங்கடம் மட்டும் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
Armstrong
சென்னை பெரம்பூரில் ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக மறைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், ராமு, திமுக நிர்வாகியின் மகன் சதீஷ், அதிமுக நிர்வாகியும், வழக்கறிஞருமான மலர்க்கொடி, தமாகாவை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரன், பாஜகவை சேர்ந்த அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், ரவுடி திருவேங்கடம் மட்டும் என்கவுண்டர் செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்டவர்களின் சொத்துக்களை முடக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆம்ஸ்ட்ராங் மனைவி தனது குழந்தை மற்றும் உறவினர்களுடன் வசித்து வருகிறார். அவர்களுக்கு சதீஷ் என்பவர் பெயரில் கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையை கடத்தி விடுவதுடன் அவருடயை குடும்பத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடந்த சில நாட்களில் மட்டும் எவ்வளவு கொலைகள்! லிஸ்ட் போட்டு திமுகவை டேமேஜ் செய்த டிடிவி. தினகரன்!
armstrong
இதுகுறித்து ஆம்ஸ்ட்ராங் மனைவி புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, குழந்தை இருக்கும் வீட்டிற்கு துப்பாக்கிய ஏந்திய வகையில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் செம்பியம் காவல்துறையினர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.