
பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் “ எதிர்க்கட்சிகளின் கூட்டம் மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமை தான் தமிழ்நாட்டில் அடைந்த அனைத்து வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. அதே போல், அகில இந்திய அளவிலும் ஒற்றுமை தான் முக்கியம் என்பதை நான் வலியுறுத்தினேன். சில முக்கியமான ஆலோசனைகளையும் நான் வழங்கினேன். உதாரணமாக, எந்த மாநிலத்தில் எந்த கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்த கட்சி தலைமையில் கூட்டணி அமைத்து கொள்ளலாம். கூட்டணியாக அமைக்க முடியவில்லை எனில், தொகுதி பங்கீடு செய்து கொள்ளலாம்.
அது முடியவில்லை என்றால், பொது வேட்பாளரை அறிவித்துக் கொள்ளலாம். தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்து கொள்ளலாம் என்பது சரியான் நிலைப்பாடாக இருக்க முடியாது. அரசியல் கட்சிகளிடையே குறைந்தபட்சம் செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்று அந்த கூட்டத்தில் பேசினேன். பாஜகவை வீழ்த்துவதை ஒற்றை இலக்காக அனைத்து தலைவர்களும் கொண்டுள்ளனர். பாஜகவை எதிர்க்கும் அனைத்தும் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று நினைத்தோம். அந்த ஒற்றுமை பாட்னாவில் ஏற்பட்டுள்ளது. ஒற்றுமையே வெற்றிக்கு அடிப்படை. நிச்சயமாக அகில இந்திய அளவில் பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது கருவாகி இருக்கிறது. அது உருவாக இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அடுத்தடுத்த நடவடிக்கைகளை தெரியப்படுத்துகிறோம். பாட்னாவில் கூடினோம். மகிழ்ச்ச்சியுடன் திரும்பினோம்” என்று தெரிவித்தார்.
கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம்.. கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும்? வெளியான முக்கிய தகவல்
பாட்னாவில் ஆலோசனைக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கூட்டம் முடிந்தவுடனேயே கிளம்பியது குறித்து செய்தியாளர்கள் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், விமானத்திற்கு தாமதமாகிவிட்டதால் உடனே கிளம்பியதாகவும், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்று தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் 2024 மக்களவை தேர்தல் குறித்து ஆலோசிக்க இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 20 கட்சிகள் பங்கேற்றன.
நிதிஷ் குமார் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் மற்றும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பிடிபி தலைவர் மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அடுத்த ஆண்டு தேர்தலின் போது பாஜகவை எதிர்த்துப் போராட எதிர்க்கட்சியினர் ஒப்புக்கொண்டதாகவும் அடுத்த மாதம் சிம்லாவில் மீண்டும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என்று கூறியிருந்தார்.
நாங்க இருக்கோம்; ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு தொலைபேசியில் உறுதி அளித்து நம்பிக்கை ஏற்படுத்திய கனிமொழி