வங்கதேசத்தவர்களை உடனே வெளியேற்றிடுக.! தமிழக அரசுக்கு தேதி குறித்த பாஜக

Published : May 04, 2025, 05:53 PM IST
வங்கதேசத்தவர்களை  உடனே வெளியேற்றிடுக.! தமிழக அரசுக்கு தேதி குறித்த பாஜக

சுருக்கம்

காஷ்மீர் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றக் கோரி பாஜக போராட்டம் அறிவித்துள்ளது. 

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாதி தாக்குதலில் சிக்கி 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில், இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளது. இந்தியாவில் உள்ள பகிஸ்தானியர்கள், வங்கதேசத்தவர்களை வெளியேற்றிட உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாஜக சார்பாக போராட்டத்தில் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் பகுதியின் அமைதியைக் கெடுக்க சதி திட்டங்கள் தீட்டும் குழுக்களை உள்நாட்டிலேயும், எல்லை தாண்டியும் கண்டறிந்து அவர்கள் மீது சமரசமில்லாத முறையில் நடவடிக்கைகள் எடுக்க நமது மத்திய அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது.

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேற்றம்

நாடு முழுக்க சட்டவிரோதமாக குடியேறியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்து சட்டவிரோத குடியேறிகளே இந்தியாவிற்குள் நடக்கும் பல அசம்பாவிதங்களுக்குக் காரணம் எனவும், ஒரு அசாதாரண சூழ்நிலையில் நம் நாட்டை சேதப்படுத்தும் நோக்கத்துடன் தான் அவர்கள் இங்கு குடியேறியுள்ளார்கள் எனவும் வலுவாக சந்தேகிக்கும் சூழ்நிலையும் தற்போது தலை தூக்கியுள்ளது. "பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசம் கைப்பற்ற வேண்டும் என வங்கதேச ராணுவ ரைபிள்ஸ் படையின் முன்னாள் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம். ஃபஸ்லூர் ரஹ்மான் இந்தியாவிற்கு எதிராகக் கூறியுள்ள கருத்து நமது சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

33 வங்கதேசத்து குடியேறிகள் கைது

இந்த நேரத்தில் 24 ஆண்டுகளாக திருப்பூரில் வாழ்ந்து வந்து, ஒரு தமிழகப் பெண்ணையும் திருமணம் செய்து கொண்ட சயான் என்ற வங்கதேசத்துக் குடியேறியை இரண்டு நாட்களுக்கு முன்பு நமது காவல்துறை கைது செய்த போதும், ஏப்ரல் 29-ஆம் தேதியன்று டெல்லி காவல்துறை சென்னையில் சட்டவிரோதமாக வாழும் 33 வங்கதேசத்து குடியேறிகளை கைது செய்த போதும் தமிழகமே பேரதிர்ச்சியடைந்தது. ஆனால், தமிழகத்தில் நமது ராணுவத்தை சந்தேகித்தும், நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் சர்ச்சைகள் எழுப்பும் விதமாகவும் சிலர் அவதூறுகளைப் பரப்ப முயல்வதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தேச இறையாண்மைக்கு விரோத செயல்

 திமுக அரசை விமர்சனம் செய்தால் உடனே கைது, தங்கள் உரிமைகளுக்காக போராடுபவர்கள் மீது பொய் வழக்கு, பாஜக-வினர் உட்பட எதிர்க்கட்சிகள் மீது காவல்துறையை ஏவி அச்சுறுத்தல் என சர்வாதிகார போக்கைக் கையாளும் திமுக ஆட்சியில்தான் தேச இறையாண்மைக்கு விரோதமாகவும், நமது இந்திய ராணுவத்தை அவமதிக்கும் விதமாகவும் பதிவிடுபவர்கள் சுதந்திரமாக உலவுகிறார்கள். சற்று சிந்தித்துப் பார்த்தால் திமுக அரசே அவர்களை சீராட்டி வளர்ப்பது போல் உள்ளது.

மே 5ஆம் தேதி பாஜக போராட்டம்

ஆகவே, பஹல்காம் தீவிரவாத தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தான். வங்கதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை தொடர்ந்து அடையாளம் கண்டு வெளியேற்றுவதிலும் தமிழக அரசு மும்முரமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், ராணுவத்தின் மீதும் தேச பாதுகாப்பின் மீதும் ஆதாரமற்ற விஷ வதந்திகளைக் கிளப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மே 5-ஆம் தேதியன்று ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை அறிவித்துள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல் புகார்.! KN நேருவின் அஸ்திவாரத்தை அசைக்கும் ED! சிக்கப்போகும் அதிகாரிகள்.!
Jayalalithaa Assets: ஹைதராபாத்தில் ஜெயலலிதா சொத்துக்களை கவனிப்பது யார்? தொடரும் மர்மம்!