
நீச்சல் பயிற்சிக்கு வந்த பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதற்காக நீச்சல் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயதான பாலாஜி (39) என்பவர் நீச்சல் பயிற்சியாளராக பணிபுரிகிறார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் நீச்சல் பயிற்சியின் போது பாலாஜியுடன் பழகியுள்ளார். அப்போது இருவரும் நண்பர்களாகியுள்ளனர். காலப்போக்கில், பாலாஜி அவரைக் காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் கேட்டு தொந்தரவு செய்யத் தொடங்கினார்.
காதல் மறுக்கப்பட்டதால் ஆத்திரம்:
அந்தப் பெண் பாலாஜியின் காதலை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த பாலாஜி, அந்தப் பெண்ணின் சில புகைப்படங்களை ஆபாச படங்களாக மாற்றி இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் பெண்ணின் பெயரிலேயே போலி ஐடியைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் மார்பிங் படங்களை வெளியிட்டுள்ளார்.
3 மொபைல் போன்கள் பறிமுதல்:
அதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெண் மருத்துவர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணைக்குப் பிறகு, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பி. பாலாஜியை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் அவரிடமிருந்து 3 மொபைல் போன்களைப் பறிமுதல் செய்தனர். அவர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.