இனி பெண்களுக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு! சென்னை காவல்துறை சூப்பர் திட்டம்!

Published : Apr 29, 2025, 08:29 AM ISTUpdated : Apr 29, 2025, 10:36 AM IST
இனி பெண்களுக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு! சென்னை காவல்துறை சூப்பர் திட்டம்!

சுருக்கம்

 Red Button Robotic COP: பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, சென்னையில் 200 இடங்களில் 'ரெட் பட்டன் – ரோபோட்டிக் காப்' என்ற புதிய பாதுகாப்பு சாதனம் ஜூன் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

 Red Button Robotic COP: பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல் ஆணையர் அருண் முயற்சியால் சென்னை முழுவதும் 200 இடங்களில் வரும் ஜூன் மாதல் முதல் ரெட் பட்டன் – ரோபோட்டிக் காப்  ( Red Button Robotic COP ) என்ற புதிய பாதுகாப்பு சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

சென்னை மாநகர காவல்துறை

இது குறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னை பெருநகரில் பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய , சென்னை பெருநகர காவல் துறையினரால் ”ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்’ என்ற புதிய பாதுகாப்பு சாதனம் தற்போது சென்னை நகரின் முக்கியமான 200 இடங்களில் நிறுவப்பட உள்ளது.

இதையும் படிங்க: செயலிழந்த பிரேக்! அலறி கூச்சலிட்ட 314 பயணிகள்! சென்னை விமான நிலையத்தில் திக்.. திக்.. நிமிடங்கள்!

முக்கிய அம்சங்கள்

 24 மணி நேரமும் இயங்கக் கூடிய இந்த பாதுகாப்பு சாதனம் கேமரா 360  டிகிரியில் வீதியிலும் பல மீட்டர் தூரம் கண்காணிக்கும் திறன்கொண்டது.  எளிதில் அழுத்தக்கூடிய சிவப்பு ஆபத்து பொத்தான், எச்சரிக்கை ஒலி மற்றும் உடனடி காவல் அழைப்பு, ஜிபிஎஸ் மூலம் துல்லிய இடம் கண்காணிப்பு, உயர் தர கேமரா மற்றும் மைக்ரோபோன், பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் காவல்துறையால் கண்காணிக்கப்படுகிறது. 

எப்படி செயல்படுகிறது? 

இந்த சாதனத்தில் உள்ள ஒரு சிவப்பு நிற பொத்தானை ஆபத்தில் இருக்கும் நபரோ அல்லது அவருக்காக மற்றொரு நபரோ அழுத்துவதன் மூலம் உடனடியாக காவல்துறைக்கு அழைப்பும், அருகிலுள்ளவர்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பி சப்தம் ஏற்படுத்தி உதவிடவும், ஆபத்தில் உள்ளவர்க்கு வீடியோ கால் வசதி மூலம் நேரடியாக காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உதவிக் கோரவும் , ரோந்து காவல் வாகனங்கள் வீடியோ கால் அழைப்பு மூலம் நிகழ்வுகளை கண்காணித்து உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து வந்தடைந்து உரிய நடவடிக்கை எடுத்திட முடியும். குறிப்பாக  கேமரா பதிவுகள் மூலம் நிகழ்வுகளை கொண்டு புலன் விசாரணையை தொடங்கி நடவடிக்கை எடுத்திடவும் பெரிதும் உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த இடங்களில் நவீன பாதுகாப்பு சாதனம் 

நவீன பாதுகாப்பு சாதனம் மூலம் பொதுமக்கள் பயனடையும் வகையில் சென்னையின் ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகள் இடங்களில் இது நிறுவப்பட உள்ளது. பூங்காக்கள் உள்ளிட்ட இந்த சாதனம் பெண்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து பொதுமக்களுக்கும் உயிர் காக்கும் நம்பிக்கையான பாதுகாப்பு தோழராக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!