ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரில் வந்த வேன் சக்கரத்தில் சிக்கி மகன் கண் முன்னே தாய் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பல்லலகுப்பம் பகுதியை சேர்ந்தவர் டில்லிபாபு. இவர் ஓசூரில் தங்கி பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரிதா. இவர் தனியார் காலனி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று அந்த பகுதிகளில் மின்தடை என்பதால் சரிதா பணிபுரியும் தொழிற்சாலை நேற்று விடுமுறை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விடுமுறை என்பதால் ஒடுகத்தூர் அருகே உள்ள பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சரிதா தனது மகன் காமேஷை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
இதையும் படிங்க;- நிலமே வழங்காத வடஇந்தியர்களுக்கு NLC வேலை வழங்கியது எப்படி? பின்னணியில் ஊழல் முறைகேடு!அம்பலப்படுத்தும் அன்புமணி
அப்போது, குருவராஜபாளையம் பகுதியில் இருந்து மாதனூர் நோக்கி தேங்காய் மட்டை லோடு ஏற்றி வந்த வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி இருவரும் கீழே வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சரிதா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
மேலும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த காமேஷை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகன் கண்முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- ப்ளீஸ் வேணாம் விட்டுடுங்க! நான் உங்க பொண்ணு மாதிரி! கதறியும் விடாமல் பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு ஆப்பு.!