வலது கை அகற்றப்பட்ட குழந்தை திடீர் மரணம் அடைந்தது ஏன்.? எழும்பூர் மருத்துவமனை டீன் விளக்கம்

By Ajmal Khan  |  First Published Aug 6, 2023, 2:05 PM IST

வலது கை அகற்றப்பட்ட குழந்தைக்கு ஏற்பட்ட தொற்று உடல் முழுவதும் பரவியதால் உடல் உறுப்புகள் செயலிழந்ததாகவும், ஒவ்வொரு நாளும் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


குழந்தைக்கு வலது கை அகற்றம்

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜிசா தம்பதியின்  ஒன்றரை வயது குழந்தை முகமது மையூருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தலையில் நீர் கோர்த்தல் பிரச்சினை காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். அங்கு, தலையில் அறுவை சிகிசிச்சை செய்து ஸ்டன்ட் வைக்கப்பட்டது. இதனையடுத்து  குழந்தையின் வலது கையில் ‘ட்ரிப்ஸ்’ போடப்பட்டுள்ளது. அப்போது குழந்தையின் கை நிறமானது மாறியது. சில மணி நேரத்தில் கை அழுகியதால் வலது கை முழுவதுமாக அகற்றப்பட்டது. இந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக குழந்தைக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதும் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தால் குழந்தை உயிர் இழந்தது. 

Tap to resize

Latest Videos

உயிர் இழந்த குழந்தை

குழந்தை உயிர் இழந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தநிலையில் இது தொடர்பாக சென்னை எழும்பூர் மருத்துவமனை டீன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ராமநாதபுரத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை முகமது மகீர், குறை பிரசவத்தில் 1.5 கிலோ எடையுடன் 32 வாரத்தில் பிறந்தது. அந்த குழந்தைக்கு தீவிர hydrocephalus எனும் மூளையில் நீர் கசியும் கோளாறு இருந்தது. அதற்காக ஐந்து மாதத்தில் நீர் கசிவை உறிஞ்சி எடுக்க VP shunt எனும் சிகிச்சை வழங்கப்பட்டது.  மேலும், தீவிர ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வளர்திறன் குறைபாடையும் அந்த குழந்தை  கொண்டிருந்தது. இதனையடுத்து  நீர் கசிவை உறிஞ்சுவதற்காக பொருத்தப்பட்ட VP shunt ஆசன வாய் வழியாக வெளியேறியது , இதன் காரணமாக குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து பாதித்தது

உயிர் இழப்பிற்கு காரணம் என்ன.?

மேலும் விட்டமின் டி குறைபாடு , ஹைப்போதைராய்டிசம் உள்ளிட்ட பாதிப்பின் காரணமாக மருத்துவர்கள் குழு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தைக்கு ஏற்பட்ட தொற்று உடல் முழுவதும் பரவியதால் உடல் உறுப்புகள் செயலிழந்ததாகவும், ஒவ்வொரு நாளும் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைட்டமின் டி குறைபாடு, ஹைப்போதைராய்டிசம் பாதிப்பு காரணமாக ரத்தத்தில் நச்சுத்தன்மை கலந்தததையடுத்து குழந்தை உயிரிழந்ததாக எழும்பூர் மருத்துவமனை டீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

தவறான சிகிச்சையால் அப்போ பிரியா உயிரிழப்பு! இப்போ குழந்தையின் கை துண்டிப்பு.!1 கோடி இழப்பீடு வழங்கிடுக- சீமான்

click me!