காவிரி பிரச்சினை: முதல்வர் ஸ்டாலினுடன் பேசி முடிவு - திருமாவளவன் கருத்து!

By Manikanda Prabu  |  First Published Aug 6, 2023, 1:25 PM IST

காவிரி விவகாரத்தில் தமிழக முதலமைச்சருடன் கலந்து பேசி எவ்வாறு  திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தலையிடுவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்


அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் அக்கா பானுமதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடன், கர்நாடாகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நீங்கள் காவிரி பிரச்சனைக்கு  அந்த முதல்வரை நேரில் சந்திப்பீர்களா கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திருமாவளவன், “காவிரி விவகாரத்தில் தமிழக முதலமைச்சருடன் கலந்து பேசி இதில் எவ்வாறு  திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தலையிடுவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.” என்றார்.

Tap to resize

Latest Videos

undefined

தொடர்ந்து பேசிய அவர், “கர்நாடகா மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் காவிரியில் அணை கட்டுவது உள்ளிட்ட முயற்சிகளில் கர்நாடக அரசு ஈடுபடுகிறது. அது அவர்களின் மாநில நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்கிற முயற்சி. அதேபோல் நாம் தமிழ்நாடு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பிரச்சினையை அணுகுவோம். இரண்டு மாநில மக்களின் நலனுக்கு ஏற்ப  காவேரி மேலாண்மை வாரியம் தலையிட்டு உரிய தீர்வு எடுக்க வேண்டும். மத்திய அரசு இதனை சரியான முறையில் அணுகி சுமூக தீர்வு ஏற்படுத்தி தரும் என நம்புவோம்.” என கூறினார்.

தமிழகம், தெற்கு ரயில்வேயின் வளர்ச்சி திட்டங்கள் புறக்கணிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி., குற்றச்சாட்டு!

மேலும் இந்தி மொழியை அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு பதில் அளித்த திருமாவளவன், “ஒரே தேசம் ஒரே கலாசாரம் என்ற கருத்து அடிப்படையில் பாஜக அரசு ஒரே மொழி ஒரே மதம் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் அனைத்து மக்களும் இந்தி மொழியை பேச வேண்டும், எதிர்காலத்தில் நாட்டில் அனைவரும் இந்தி பேசக்கூடியவர்களாக மாற வேண்டும், இந்தி பேசும் மக்களின் கலாச்சாரத்தை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பின்பற்ற வேண்டும் என்கிற அடிப்படையில் அவர்கள் இயங்கி வருகிறார்கள். எனவே இந்தி மொழியை யாரும் எதிர்க்கக் கூடாது என சொல்லி உள்ளார். யார் மீதும் இந்தி  திணிக்க கூடாது என்பதுதான் ஜனநாயகம். அந்த ஜனநாயக அணுகுமுறைகளை ஒருபோதும் பாஜக அரசு மதிப்பதில்லை அரசமைப்பு சட்டத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. அனைவரும் இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அமித் ஷாவின் ஏதச்ச அதிகாரத்தை காட்டுகிறது இது கண்டிக்கத்தக்கது.” என்றார்.

click me!