அரசியலை விட்டு விலக இன்னொரு வாய்ப்பு! ராகுல் காந்திக்கு குஷ்பு அட்வைஸ்!

Published : Nov 14, 2025, 07:34 PM IST
Khushbu slams Rahul Gandhi

சுருக்கம்

பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் பின்னடைவைத் தொடர்ந்து, ராகுல் காந்தி அரசியலை விட்டு விலக வேண்டும் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு விமர்சித்துள்ளார். மோடி மற்றும் நிதிஷ் குமாரின் தலைமைக்கு கிடைத்த வெற்றி எனவும் குறிப்பிட்டார்.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி சந்தித்துள்ள பின்னடைவு குறித்து விமர்சித்துள்ள தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு, ராகுல் காந்தி அரசியலை விட்டு விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.

பீகார் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் (JD(U)), சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய என்.டி.ஏ. கூட்டணியில் (NDA) போட்டியிட்டன. மற்ற கட்சிகளை விட பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலை விட்டு விலகுவதற்கான வாய்ப்பு

இந்தச் சூழலில் தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு, பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ஆகியோர் இணைந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள குஷ்பு, “வெற்றி பெற என்ன தேவை என்பதை அவர்கள் காட்டிவிட்டார்கள். காங்கிரஸ் படுதோல்வி அடைந்துவிட்டது. ராகுல் காந்தி அரசியலை விட்டு விலக மற்றுமொரு வாய்ப்பும் காரணமும் இது” என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

 

 

வெற்றி பெறப் பிறந்தவர்கள்

மற்றொரு பதிவில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வென்றுவிட்டது. சில தலைவர்கள் (பிரதமர் மோடி, நிதிஷ் குமார்) வெற்றி பெறுவதற்காகவே பிறந்துள்ளனர். மக்களுக்கு அவர்கள் ஆற்றிய சேவை அவர்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவந்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தேர்தல் முடிவுகள், பீகாரில் பிரதமர் மோடி மற்றும் நிதிஷ் குமாரின் கூட்டுத் தலைமைக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும், அதே சமயம் இந்தியா கூட்டணிக்கு, குறிப்பாகக் காங்கிரஸ் கட்சிக்கு, பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!
காவல் நிலையத்தில் புகுந்து காவலருக்கு வெட்டு.. தமிழகத்தில் தினமும் 5 படுகொ**லை.. ஷாக் கொடுக்கும் அன்புமணி