உஷார்..! சென்னையில் மட்டும் 28 லட்சம் வழக்கு..! விதிமுறைகளை மீறினால் யாரையும் விடுவதாக இல்லை போலீஸ்..!

By ezhil mozhiFirst Published Sep 10, 2019, 1:03 PM IST
Highlights

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தின்படி சாலை விதிகளை மீறுவோரிடம் பல மடங்கு அதிக அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை தற்போது தமிழகத்தில் முழு வீச்சாக அமல் படுத்தப்பட்டு உள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தின்படி சாலை விதிகளை மீறுவோரிடம் பல மடங்கு அதிக அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை தற்போது தமிழகத்தில் முழு வீச்சாக அமல் படுத்தப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக இருசக்கர வாகனத்தில் செல்லும் நடுத்தர குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டம் அமலில் உள்ள மற்ற மாநிலங்களில் ஹெல்மட் அணியாவிட்டால் 1000 ரூபாயும் உரிமம் இல்லாவிட்டால் 5 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். எனவே பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர் 

சென்னையை பொறுத்தவரையில் இரண்டே மாதத்தில் சுமார் 28 லட்சம் போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்கு பதியப்பட்டு உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது. விதிகளை மீறுபவர்களை தானியங்கி கேமரா மூலம் படம் பிடித்து சுமார் 28 லட்சம் வழக்கு பதிவு செய்யப்பபட்டு உள்ளது. விதிமீறலில் ஈடுபட்ட 8,300 வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

மேலும் சென்னையிலே மிக அதிகமான வழக்கு பதியப்பட்டு உள்ள இடம் அண்ணா நகர். அதாவது ஒரே நாளில் 63 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டு உள்ளது. கடந்த ஜுலை மாத இறுதியில் 58 நவீன ANPR கேமராக்கள் அண்ணா நகரில் பதியப்ப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!