
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிக்கான விருது சேலம் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. மேலும் ரூ.25 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் படிக்க:சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் உயர்வு.. முதலமைச்சர் அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா..?
அதைபோல், சிறந்த நகராட்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலிடம் பிடித்து விருதினை பெற்றுள்ளது. மேலும் ரூ.15 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. 2 வது இடத்தை குடியாத்தம் நகராட்சிக்கு ரூ.10 லட்சமும் 3 வது இடத்தை பிடித்த தென்காசி நகராட்சிக்கு ரூ.5 லட்சமும் பரிசு தொகை மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க:Tamil Nadu DA allowances 2022 : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு முதலமைச்சர் அறிவிப்பு!!
சிறந்த பேரூராட்சிக்கான விருதினை செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சி பெற்றுள்ளது. கன்னியாகுமரி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. கருங்குழி பேரூராட்சிக்கு ரூ.10 லட்சமும், கன்னியாகுமரிக்கு ரூ.5 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது