தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% இருந்து 34% அதிகரிப்பு. ஒன்றிய அரசு பணியார்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு.
நாடே 75வது சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடிக் கொண்டு இருக்கும்போது, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். அறிவிப்பின்படி அகவிலைப்படி உயர்வு 1-7-2022 முதல் 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% இருந்து 34% அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு பணியார்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது 18 ஆயிரமாக வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி இனி ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கும்போது, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுதந்திர தினத்தை ஒட்டி, கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணியளவில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் 2 வது முறையாக தேசிய கொடியேற்றினார். பின்னர் சுதந்திர தின உரையை நிகழ்ச்சி வருகிறார்.
முன்னதாக காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினர் அணிவகுப்பை முதலமைச்சர் பார்வையிட்டார்.
Tamil News live : அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34%ஆக உயர்வு! முதல்வர் ஸ்டாலின் ...
இந்நிலையில் தமிழக அரசு உழியர்களுக்கு அகவிலைப்படி 31% இருந்து 34 % ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 16 லட்சம் பேர் பயன் பெறுவர். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 1,947.60 கோடி ரூபாய் கூடுதலாக செலாவாகும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கி பாராட்டினார்.
ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது.. இந்த ஆண்டிற்கான நல்லாளுமை விருது பெற்றவர்கள் விவரம்..