ரேடார் இயக்கம் குறித்து வீண் சந்தேகம் வேண்டாம்… விளக்கம் அளித்தார் பாலச்சந்திரன்!!

By Narendran SFirst Published Nov 9, 2021, 3:40 PM IST
Highlights

ரேடார் இயக்கம் குறித்து வீண் சந்தேகம் வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

ரேடார் இயக்கம் குறித்து வீண் சந்தேகம் வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இந்த நிலையில்  நவம்பர் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை மீண்டும் வெள்ள பாதிப்பை சந்திக்கக்கூடும் என கூறப்படுகிறது. இதற்கிடையே தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்தகாற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, 48 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து, நவம்பர் 11 ஆம் தேதி வட தமிழகத்தை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் இயக்கம் குறித்து வீண் சந்தேகம் வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் இரண்டு ரேடார்களும், காரைக்காலில் ஒன்றும், ஸ்ரீஹரிகோட்டாவில் ஒன்றும் என 4 ரேடார்கள் இருக்கின்றன என்றும் அதில் சென்னையில் இருப்பது எக்ஸ்பேண்ட் ரேடார் என்றும் மற்றொன்று பள்ளிக்கரணையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.  அந்த வகையில் சென்னைக்கு தற்போது 4 ரேடார்கள் இயங்கிக் கொண்டிருப்பதாக கூறிய சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மையத்தில் உள்ள எக்ஸ்பேண்ட் ரேடார் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்டது என்றும் இது தொடர்ந்து இயங்கி வந்ததால், அதன் ஒரு சில பாகங்கள் தேய்ந்துவிட்டன என்றும் தெரிவித்தார். எனவே, அதனை மட்டும் 24 மணி நேரமும் இயக்க முடியாத நிலை உள்ளதாக கூறிய அவர், தேவைப்படும்போது அதையும் இயக்கிக் கொள்ளலாம் என்றும் பள்ளிக்கரணையில் உள்ள ரேடார் தொடர்ந்து இயங்கும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தேய்ந்த பாகங்களை சரி செய்வதற்காக இந்திய வானிலை ஆய்வுத் துறை இஸ்ரோவுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ளவிருப்பதாக கூறிய சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், புதிய பாகம் பொருத்தப்பட்டதும் அந்த ரேடாரும் தொடர்ந்து இயங்கும் என்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில சமயங்களில் ரேடார்கள் செயல்படாது தெரிவித்துள்ளார். அதனை சரி செய்ய இந்திய வானிலை ஆய்வு  மையம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையத்தில் மிகச் சிறந்த ரேடார் நிபுணர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறிய சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், அவர்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள் என்றும் எனவே, ரேடார் இயக்கம் குறித்து வீண் சந்தேகம் வேண்டாம் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

click me!