வலு மிக்க அதிதீவிர 'பேய்ட்டி' புயல் !! சென்னை அருகே கரையைக் கடக்கும் …. கஜா -2 வா ? அடுத்த எச்சரிக்கை !!

By Selvanayagam PFirst Published Dec 8, 2018, 7:20 AM IST
Highlights

இந்திய பெருங்கடலின் நிலநடுக்கோடு பகுதிக்கும் , வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதிக்கும் இடையே வரும் 10 ஆம் தேதி உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு  பகுதி புயல் சின்னமாக உருவாகும் என்றும் சென்னைக்கும், ஆந்திராவின்விசாகப்பட்டினத்துக்கும் இடையே அது கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த புயலுக்கு தாய்லாந்து தேர்வு செய்துள்ள, 'பேய்ட்டி' என பெயர் வைக்கப்பட்வுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழையில் தற்போது சற்று  இடைவெளி ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யவில்லை. கடந்த , 24 மணி நேரத்தில், சாத்தனுார் மற்றும் சத்தியமங்கலத்தில், தலா, 2 செ.மீ., - வேலுார் கலவை மற்றும் கிருஷ்ணகிரியில், தலா, 1 செ.மீ., மழை பெய்துள்ளது.

தற்போதைய வானிலையை பொருத்தவரை தமிழகத்தில், 28 மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவுகிறது. கரூர், விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், ஒருசில இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும்  சென்னையில் திடீர் மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையத் தெரிவ்ததுள்ளது.

இதனிடையே  வங்கக் கடலில், புதிய புயல் சின்னம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக . வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு தென்கிழக்கில், இந்திய பெருங்கடலின் நிலநடுக்கோடு பகுதிக்கும், வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதிக்கும் இடையே, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு, அரபிக் கடல் பகுதியில் இருந்து வரும், ஈரப்பதம் நிறைந்த மேக கூட்டங்கள் வலு ஏற்படுத்துவதால், புயல் சின்னமாக உருவாகும் என்றும்,  வரும், 10ம் தேதி முதல், காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின், புயலாகவும் மாறி, தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னைக்கும், ஆந்திராவின், விசாகப்பட்டினத்துக்கும் இடைப்பட்ட பகுதியில், இந்த புயல் கரையை கடக்கும் என்றும்  இந்த புயல், வலுமிக்க தீவிர புயலாக உருவெடுக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலுக்கு, தாய்லாந்து தேர்வு செய்துள்ள, 'பேய்ட்டி' என்ற பெயர் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. புதிய புயல் உருவாவதால், தற்போதைய நிலையில், கடலோர பகுதிகளில் வறண்ட வானிலையே நீடிக்கும எனவும்  என, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

click me!