Bikeல் வந்த மரம் கும்பல்.. படுகொலை செய்யப்பட்ட BSP தலைவர் Armstrong - பெரம்பூரில் சம்பவ இடத்தில் நடந்தது என்ன?

By Ansgar R  |  First Published Jul 5, 2024, 10:48 PM IST

Armstrong Murder : வழக்கறிஞரும், பகுஜன் சம்பாஜி கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இன்று சென்னையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சிறந்த வழக்கறிஞரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவருமான ஆம்ஸ்ட்ராங், இன்று மாலை அடையாளம் தெரியாத ஆறு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றவர் தான் ஆம்ஸ்ட்ராங். 

இவர் கடந்த பல ஆண்டுகளாகவே பகுஜன் சமாஜ் கட்சியில் தமிழக மாநில தலைவராக பதவி வகித்து வருகின்றார். தலித் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பல முன்னெடுப்புகளை செய்து வரும் ஆம்ஸ்ட்ராங், பிரபல திரைப்பட இயக்குனர் ரஞ்சித் அவர்களுடைய மிக நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos

Amstrong: பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை; நண்பனின் இழப்பை தாங்காமல் கதறி துடித்த பா.ரஞ்சித் 

இன்று மாலை பெரம்பூரில் நடந்தது என்ன? 

இந்நிலையில் இன்று மாலை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டு வாசலில், தனது நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் சிலரோடு இணைந்து அவர் வழக்கம் போல பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது அங்கே இரண்டு, இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத ஆறு நபர்கள், தனது நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி கொடூர தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 

இதில் அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலமுறை வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச்சென்ற நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் அருகில் இருந்த இருவர் அந்த வாகனத்தில் சென்றவர்களை மடக்கி பிடிக்க ஓடி சென்ற பொழுது, அவர்களை அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டியதாகவும், உணவு டெலிவரி செய்பவர்களை போல அவர்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதை கேட்டு, வீட்டின் உள்ளே இருந்த அவரது உறவினர்கள் வெளியே ஓடி வந்து பார்த்த பொழுது, ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தார். அவரை உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர். 

ஆம்ஸ்ட்ராங் அவர்களுடைய மறைவு மிகப்பெரிய சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. மேற்கொண்டு கலவரம் உருவாகாமல் இருக்க, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் வந்து கண்ணீர் வாழ்க அழுது நின்ற காட்சி காண்போர் மனதை உலுக்கியது. 

பகுஜன் சமாஜ்.. தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்.. சென்னையில் ஓட ஓட வெட்டி படுகொலை - யார் இந்த Armstrong?

click me!