பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது இழப்பை தாங்காமல் கதறி அழும் காட்சி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக ஆம்ஸ்ட்ராங் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் அவர் இன்றைய தினம் சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகில் தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் திடீரென அரிவாள், கத்தில் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
3 நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர்களை தாக்கிய நிலையில், மற்ற 3 நபர்கள் அம்ஸ்ட்ராங்கை மிகவும் கொடூரமாக தாக்கியுள்ளனர். திடீரென நிகழ்த்தப்பட்ட தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் ஆம்ஸ்ட்ராங் நிலைகுழைந்து கீழே விழுந்த நிலையில், மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அப்பகுதியில் இருந்து தப்பி சென்றனர்.
உரிமையாளரை கடத்தி நிலத்தை அபகரிக்க முயற்சி; பாஜக பிரமுகர்கள் உள்பட 3 பேர் கைது
தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இயக்குநர் பா.ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படுகிறது. இதனிடையே தாக்குதல் குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு அலறியடித்து வந்த பா.ரஞ்சித் தனது நண்பனின் மரண செய்தி கேட்டு மருத்துவமனையிலேயே கதறி அழுதார்.