முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை உறுதியா? ரத்தா? சென்னை ஐகோர்ட் தீர்ப்பு!

By vinoth kumar  |  First Published Jul 3, 2024, 12:39 PM IST

கடந்த 1998-ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கடந்த 1998-ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை எம்.பி - எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்  2019-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி தீர்ப்பளித்தது.

Latest Videos

undefined

இதையும் படிங்க: சொந்த கட்சி பெண் நிர்வாகியிடம் மோசடி! சென்னை பாஜக மாவட்டச் செயலாளரை வீடு புகுந்து அதிகாலையில் தூக்கிய போலீஸ்

அதில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், பாலகிருஷ்ணா ரெட்டி தனது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார். இதனையடுத்து சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. 

இதையும் படிங்க:  TN school education Department: அரசு பள்ளிகளுக்கு குட் நியூஸ்.. லிஸ்ட் போட்ட தமிழக அரசு!

அனைத்து தரப்பு வாததங்களும் நிறைவு அடைந்ததை அடுத்து ஜூன் 25ம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாகவும், உண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை அரசுத்தரப்பு கண்டறியவில்லை என கூறி முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து  உத்தரவிட்டது. 

click me!