Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு.!

Published : Jul 03, 2024, 06:27 AM ISTUpdated : Jul 03, 2024, 06:43 AM IST
 Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு.!

சுருக்கம்

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

இதையும் படிங்க: 2 மாதங்களில் 267 கிலோ தங்கம் கடத்திய சென்னை யூடியூபர்! அவருக்கு கமிஷன் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

அம்பத்தூர்:

அன்னை அபிராமி, கொலடி சாலை, அன்பு நகர், விஜிஎன் அடுக்குமாடி குடியிருப்பு, மகாலட்சுமி நகர், தேவி கருமாரியம்மன் நகர், தேரோடும் வீதி, நொளம்பூர், கம்பர் சாலை, 1வது பிளாக், 2வது பிளாக், 3வது பிளாக், முகப்பேர் மேற்கு பிரதான சாலை, கம்பர் சாலை, ரெட்டிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் அதிர்ச்சி.. காதல் திருமணம் செய்த 9 நாட்களில் மனைவி கொ*லை.. கணவர் விபரீத முடிவு.. நடந்தது என்ன?
காரை முற்றுகையிட்ட அஜிதா... நிற்காமல் சென்ற விஜய் - பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு