தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மரணம்; பேராசிரியர்கள் அஞ்சலி

By Velmurugan s  |  First Published Jul 5, 2024, 10:31 PM IST

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள்துணைவேந்தர் சி.ராமசாமி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார்.


கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை, முன்னாள் துணைவேந்தர் சி.ராமசாமி(வயது 77) காலமானார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் பழனி, வாகரை கிராமம். இவர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் 8-வது துணைவேந்தராக, 2002 முதல் 2008-ம் ஆண்டு வரை இரண்டு முறை பொறுப்பு வகித்துள்ளார். 

Amstrong: பகுஜன் சமாஜ் தலைவர் வெட்டி படுகொலை; நண்பனின் இழப்பை தாங்காமல் கதறி அழுத பா.ரஞ்சித்

Tap to resize

Latest Videos

இவர் ஒரு புகழ்பெற்ற பொருளாதார விஞ்ஞானி மற்றும் பல சர்வதேச கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் பல உயர்மட்ட குழுக்களின் ஆலோசகராக இருந்துள்ளார். இந்திய பொருளாதா மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர், வேளாண் பல்கலைக்கழகத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துதல், தொழில்துறைகளுடன் ஆராய்ச்சி புரிந்துணர்வு ஒப்பந்தம், தனியார் வேளாண் கல்லூரிகளை துவங்குதல், சொந்த வருவாய் பயன்படுத்தி பல்கலைக்கழகத்தை நடத்துதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டவர். 

உரிமையாளரை கடத்தி நிலத்தை அபகரிக்க முயற்சி; பாஜக பிரமுகர்கள் உள்பட 3 பேர் கைது

இவருக்கு சந்திரா என்ற மனைவியும், பிரியா ஆனந்த், சவிதா லெனின் என்ற மகள்கள் உள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறிய அறுவைசிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், நேற்று காலமானார். இவரது இறுதிசடங்கு கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடக்கிறது. இவரது மறைவுக்கு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி மற்றும் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் என பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

click me!