BSP Party Armstrong Murdered : பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், இன்று கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த செம்பியம் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வசித்து வருகின்றார். இந்நிலையில் இன்று ஜூலை 5ம் தேதி தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த பொழுது திடீரென அவர் மீது அடையாளம் தெரியாத சில நபர்கள் அரிவாள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களால் அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பயங்கர காயமடைந்த ஆம்ஸ்ட்ராங், ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் தற்பொழுது சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
undefined
கொடூரமாக கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் அவர்களுடைய உடல் தற்பொழுது பிரேதபரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவரை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பி சென்ற ஆறு பேர் கொண்ட கும்பலை உங்களை போலீசார் தீவிரமாக தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?
இறந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், ஒரு பயிற்சி பெற்ற வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்ச்சியாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் கடந்த 2007 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராகவும் இவர் சென்னையில் பொறுப்பேற்றார். தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதிக முறை போராடியுள்ள ஆம்ஸ்ட்ராங்கிற்கு சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் மதிப்பு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
உரிமையாளரை கடத்தி நிலத்தை அபகரிக்க முயற்சி; பாஜக பிரமுகர்கள் உள்பட 3 பேர் கைது