தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்கிறதா..? குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 நிர்ணயம்.. முக்கிய ஆலோசனை..

By Thanalakshmi VFirst Published May 27, 2022, 4:49 PM IST
Highlights

தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை மறு சீரமைப்பு குறித்து உயர்நீதி மன்ற உத்தரவை அடுத்து இன்று ஆட்டோ தொழிற்சங்கங்கள் மற்றும் நூகர்வோர்களுடன் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுப்பட்டனர். அதில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 ஆக் நிர்ணயிக்க வேண்டுமென்று தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை மறு சீரமைப்பு குறித்து உயர்நீதி மன்ற உத்தரவை அடுத்து இன்று ஆட்டோ தொழிற்சங்கங்கள் மற்றும் நூகர்வோர்களுடன் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுப்பட்டனர். அதில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 ஆக் நிர்ணயிக்க வேண்டுமென்று தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆட்டோவில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்க தொழிற்சங்கத்தினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆட்டோ கட்டணம் தொடர்பாக தொழிற்சங்கங்கள், நுகர்வோரிடம் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழிற்சங்கத்தினர் மற்றும் நுகர்வோர் தெரிவித்த கருத்துகள், அறிக்கையாக அரசியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆட்டோக்களின் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூட்டத்தில் தொழிற்சங்கத்தினர் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 ஆக நிர்ணயிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக கடந்த வாரம் தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுசீரமைப்பது தொடர்பாக போக்குவரத்து இணை ஆணையர் சிவக்குமரன் தலைமையில் ஆட்டோ சங்க பிரதிநிதுகளுடனும் நுகர்வோர் நலச் சங்க பிரதிநிதிகள் உடனும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆட்டோ மீட்டர் கட்டணம் கடைசியாக 8 ஆண்டுகளுக்கு முன் தீர்மானிக்கப்பட்ட போது குறைந்தபட்சம் 1.5 கி.மீ க்கு ரூ.25 எனவும், அதன் பின் ஒவ்வொரு கிமீக்கு ரூ.12 எனவும் தீர்மானிக்கப்பட்டது. தற்போது ஆட்டோ சங்கங்கள் குறைந்தபட்ச தொகையை ரூ.50 எனவும், அதன் பின் ரூ.25 ஒவ்வொரு கி.மீக்கு நிர்ணயிக்க  கோரிக்கை விடுத்தனர்.மேலும் ஓலா, உபர் போன்ற செயலியை அரசே உருவாக்கி நடத்துவது தான் நிரந்தர தீர்வு எனவும் கூறினர்.

click me!