தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அரசு பொது விடுமுறையை அறிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நாளாக மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை ஆகஸ்ட் 9 அன்று கொண்டாடப்பட உள்ளது. ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறுத்து கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த தினம் முஹர்ரம்-உல்-ஹரம் என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு..உண்மையான அதிமுக எடப்பாடி தான்.. மகிழ்ச்சியில் இருந்த இபிஎஸ் தரப்புக்கு 'ஓபிஎஸ்' கொடுத்த ட்விஸ்ட் !
354 அல்லது 355 நாட்களைக் கொண்ட ஹிஜ்ரி நாட்காட்டியின்படி முஹர்ரம் மொஹரம் ஆண்டின் முதல் மாதம் ஆகும். இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, கடவுளின் தூதராகக் கருதப்பட்ட முஹம்மது நபி, முஹர்ரம் மாதத்தை ‘அல்லாஹ்வின் புனித மாதம்’ என்று அழைத்தார். தமிழகத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு தலைமை காஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
நேற்று மாலை முஹர்ரம் மாதத்தின் முதல் பிறை தமிழகத்தில் எங்கும் தென்படவில்லை. ஆகையால், ஞாயிற்றுக்கிழமை 31/07/2022 அன்று மொஹரம் மாத முதல் பிறை எனக் கணக்கிட்டு, இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். மொஹரம் பண்டிகையான ஆகஸ்ட் 9-ம் தேதி (செவ்வாய்) அரசு பொது விடுமுறை அளிக்கப்படவுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !