அதிர்ச்சி!! இரவோடு இரவு முயல் வேட்டை.. மின்சார வேலியில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..

Published : Jul 30, 2022, 04:17 PM IST
அதிர்ச்சி!! இரவோடு இரவு முயல் வேட்டை.. மின்சார வேலியில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..

சுருக்கம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மின்வேலியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

விருதுநகர் மாவட்டம் திருச்சூழி ஒன்றியத்திற்கு உட்பட்ட முகவூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் என்ற அயங்காளை. இவருக்கு வயது 52.  இவருக்கு 25 வயது மற்றும் 23 வயதில் அஜித் மற்றும் சுகந்திர பாண்டி எனும் இரண்டு மகன்கள் உள்ளனர். சிவகங்கை மாவட்ட எல்லை மாரனாடு கிராமம் அருகே முத்துக்குமார் என்பவரின் வயல்வெளி பகுதியில் மூன்று பேரும் நேற்று முயல் வேட்டைக்கு சென்றுள்ளார்.

மேலும் படிக்க:மக்களே உஷார் !! தமிழகத்தில் 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.. இன்று 14 மாவட்டங்களில் கனமழை..

அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக பன்றிக்கு வைத்திருந்த மின்வேலியில் மிதித்துள்ளனர். மின்சார பாய்ந்தலில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். உடனே அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பாச்சேத்தி போலீசார், மூன்று பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க:மாணவர்களே கவனத்திற்கு.. கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. எப்போது வரை..?

உயிரிழந்த அஜித் என்பவர் இராணவ வீரர் என்பதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறைக்கு சொந்த ஊர் வந்திருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் முகவூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!