தமிழகத்தில் 34வது மெகா தடுப்பூசி முகாம்... பூஸ்டர் டோஸ் இலவசம்... மா.சுப்பிரமணியன் சூப்பர் தகவல்!!

Published : Aug 02, 2022, 11:41 PM IST
தமிழகத்தில் 34வது மெகா தடுப்பூசி முகாம்... பூஸ்டர் டோஸ் இலவசம்... மா.சுப்பிரமணியன் சூப்பர் தகவல்!!

சுருக்கம்

தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாகவும் அதில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாகவும் அதில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருத்தடை வளையம் தமிழகத்தில் மிக சிறப்பாக பொருத்தப்பட்டுள்ளதற்காக 27.7 2020 அன்று நடைபெற்ற தேசிய மாநாட்டில், தேசிய அளவில் முதல் இடம் பிடித்து விருது பெறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கனமழை எச்சரிக்கை - நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !!

ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உருவான கருமுட்டை விவகாரம் தொடர்பான வழக்குகளில், சுகாதாரத்துறை சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்படும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் விதிமுறைக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும் என்றும் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி 34 ஆவது 50 மையங்களில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆற்றில் குளிக்க, செல்பி எடுக்கத தடை... காரணம் இதுதான்!!

முன்னதாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில், இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர், தமிழக சுகாதாரத்துறையின் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, தமிழக சுகாதாரத்துறையின் திட்டங்களான மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் உள்ளிட்ட திட்டங்களை, அமைச்சர் மா.சுப்பிரமணியனும் சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமாரும் விளக்கினர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?