வரும் ஆகஸ்ட் 3 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217 வது நினைவுநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி பல அரசியல் தலைவர்கள் அவருடைய உருவ சிலைக்கு அஞ்சலி செலுத்துவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி அவருடைய நினைவு நாள் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு..MiG-21 போர் விமானதிற்கு மூடுவிழா.. அபிநந்தன் முதல் அவனி சதுர்வேதி வரை.. சாதனை படைத்த வரலாறு தெரியுமா?
மேலும் அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையானது மாவட்டத்தில் இயங்கி வரும் வங்கிகளுக்கு செல்லுபடி ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..அடேங்கப்பா.! முதல்வரின் மகன் பிறந்தநாளுக்கு வராத அரசு ஊழியர்கள்..நோட்டீஸ் அனுப்பிய அரசு
மேலும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி விடுமுறை என்பதால் அதனை ஈடு செய்யும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்கள் கல்வி நிறுவனங்களும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !