பொறியியல் பாடத்திட்டத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படும்... அறிவித்தார் அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ்!!

By Narendran SFirst Published Jul 29, 2022, 5:41 PM IST
Highlights

பொறியியல் பாடத்திட்டத்தில் நடப்புக் கல்வியாண்டிலேயே மாற்றம் மேற்கொள்ளப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார்.

பொறியியல் பாடத்திட்டத்தில் நடப்புக் கல்வியாண்டிலேயே மாற்றம் மேற்கொள்ளப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 42 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் வேல்ராஜ், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: என்ன ஆச்சு, எப்படி ? பதறிய பிரதமர் மோடி.. எதற்கு தெரியுமா ? வைரல் வீடியோ !

அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார். பின்னர் பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்குத் பிரதமர் மோடி தங்க பதக்கங்களை வழங்கினார். முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் ஆண்டறிக்கையை வாசித்தார். அப்போது பேசிய அவர், பாரத தேசத்தை விஷ்வ குருவாக்க வழிகாட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுகிறார்.

இதையும் படிங்க: எல்லாருக்கும் எல்லாம்.. இதுவே திராவிட மாடல்.. மேடையில் மோடியை அதிரவைத்த முதல்வர் ஸ்டாலின்.!

பிரதமரின் வருகையால் அண்ணா பல்கலைக்கழகம் பெருமை கொள்கிறது. நடப்புக் கல்வியாண்டிலேயே (2022- 23) பொறியியல் பாடத்திட்டத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது. புதிதாக அறிமுகம் செய்யும் திறன் சார்ந்த பாடத்திட்டத்தை உருவாக்க,150 தொழில் நிபுணர்களின் உதவி கோரப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 7 ஆவது செமஸ்டரில் படிக்கும் 55 ஆயிரம் மாணவர்கள், தமிழக முதல்வரின், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகளிலும் மின் ஆளுமைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

click me!