மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை... பறிமுதல் செய்யப்பட்ட சொத்து எவ்வளவு தெரியுமா

Published : Apr 27, 2023, 06:01 PM ISTUpdated : Apr 27, 2023, 10:25 PM IST
மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை... பறிமுதல் செய்யப்பட்ட  சொத்து எவ்வளவு தெரியுமா

சுருக்கம்

தமிழக மின்வாரிய அலுவலர்களுக்கு தொடர்புடைய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 360 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழக மின்வாரிய அலுவலர்களுக்கு தொடர்புடைய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 360 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 2011 - 2016 ஆம் ஆண்டு வரை அரசுக்கு 908 கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்படுத்தியதாக தமிழக மின்வாரிய அலுவலர்கள் மீது புகார் எழுந்தது.

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட விவகாரம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

இதை அடுத்து தமிழக மின்வாரிய அலுவலர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் கடந்த 24 ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். சுமார் 10 இடங்களில் அமலாக்க துறையினர் மேற்கொண்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள், எலக்ட்ரானிக் ஆவணங்கள் மற்றும் 360 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: வாட்ஸ் ஆப் காலில் பெண்ணை மிரட்டி பணம் கேட்ட திமுக பிரமுகர் கைது

விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழகத்திற்கு நிலக்கரி கொண்டுவந்த வகையில் 908 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சோதனையில், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் வசமிருந்து 360 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதை அடுத்து 360 கோடி ரூபாய் வைப்பு நிதியை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 14 December 2025: முதல்வர் ஸ்டாலினின் பயணம் முதல் முட்டை விலை உயர்வு வரை.. இன்றைய முக்கிய செய்திகள்
தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்