தமிழகத்தில் உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை தொடங்கி வைக்க உள்ள நிலையில் அவர் இன்று சென்னை வந்தடைந்தார்.
தமிழகத்தில் உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை தொடங்கி வைக்க உள்ள நிலையில் அவர் இன்று சென்னை வந்தடைந்தார். தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை, தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார்.
இதையும் படிங்க: “காங்கிரஸ் 2.0 - ராகுல் காந்தி போட்ட புது ஸ்கெட்ச் !” எதிர்பார்ப்பில் காங்கிரஸ் தலைவர்கள்.!
அதன்படி, அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வரை பயின்ற மாணவிகளுக்கு, அவர்கள் உயர்கல்வி அல்லது பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1000 நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.698 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்திற்கு புதுமைப்பெண் திட்டம் என்ற பெயர் சூட்டி உள்ள தமிழக அரசு, செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி (நாளை) முதல் பயன்பாட்டிற்கு வரும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாதம் ரூ.1000 கலவி உதவித்தொகை பெற இதுவரை சுமார் 4 லட்சம் மாணவிகள் தமிழகம் முழுவதும் இருந்து விண்ணப்பித்துள்ளனர். அதன்படி சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டம் செப்டம்பர் 5 ஆம் தேதி (நாளை) தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: திமுக பொறுப்பேற்ற பிறகு கொலை, கொள்ளை அதிகரிப்பு... அண்ணாமலை குற்றச்சாட்டு!!
இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை காலை 10.30 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார். மேலும் 15 மாதிரி பள்ளிகள் துவக்க விழாவிலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார். இதையடுத்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் இருந்து விமானத்தில் இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாடு ஆம் ஆத்மி தலைவர் வசிகரன் உள்பட ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.