ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக கருவருக்க காத்திருக்கும் கும்பல்.. யார் இந்த பாம் சரவணன்? உளவுத்துறை அலர்ட்டால் பரபரப்பு

By vinoth kumar  |  First Published Jul 21, 2024, 1:19 PM IST

ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரும் பகுஜன் சமாஜ் கட்சி வடசென்னை மாவட்ட செயலாளருமான தென்னரசு கடந்த 2015ம் ஆண்டு தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே அவரது மனைவி மைதிலியின் கண் முன்னே ஆற்காடு சுரேஷ் ரவுடி கும்பல் வெட்டி சாய்த்தது.


ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க தலைமறைவாக உள்ள அவரது ஆதரவாளரான பாம் சரவணன் திட்டமிடலாம் என உளவுப் பிரிவு எச்சரித்துள்ள சம்பவம் தலைநகர் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் உள்ளிட்ட  11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் என்பவர் மட்டும் என்கவுண்டர் செய்யப்பட்டார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: தலைநகரை கதி கலங்க வைத்த ஆற்காடு சுரேஷ்? இவரை கொலை செய்தது யார்? ஆம்ஸ்ட்ராங்கிற்கு என்ன தொடர்பு?

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல் வெளியான வண்ணம் உள்ளது. மறுபுறம் கைது நடவடிக்கையும் நீண்டு கொண்டே போகிறது. இதுவரை திமுக நிர்வாகியின் மகன் சதீஷ், அதிமுக நிர்வாகி மலர்க்கொடி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், பாஜகவை சேர்ந்த அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான ஹரிதரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசப்பட்ட 5 செல்போன்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதையும் படிங்க: Sambo Senthil : யார் இந்த சம்போ செந்தில்.! ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு ஏற்பட்டது எப்படி.?

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க  பாம் சரவணன் தலைமறைவாக இருந்து கொண்டே திட்டம் தீட்டி வருவதாக உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரும் பகுஜன் சமாஜ் கட்சி வடசென்னை மாவட்ட செயலாளருமான தென்னரசு கடந்த 2015ம் ஆண்டு தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே அவரது மனைவி மைதிலியின் கண் முன்னே ஆற்காடு சுரேஷ் ரவுடி கும்பல் வெட்டி சாய்த்தது. அந்த தென்னரசுவின் சகோதரர்கள் தான் இந்த பாம் சரவணன். வெடிகுண்டு வீசுவதில் கை தேர்ந்தவர் என்பதால் பாம் சரவணன் பெயர் வந்தது. இவர் மீது 5 கொலை வழக்கு, வெடிகுண்டு வீச்சு, கட்டப் பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்க்க பாம் சரவணன் ரகசிய திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை சந்தேகிக்கிறது. இதன் காரணமாக போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!