Madurai News: மதுரையில் மாமியாரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிவிட்டு நாடகமாடிய மருமகள்! சிக்கியது எப்படி?

Published : Jul 21, 2024, 11:20 AM ISTUpdated : Jul 21, 2024, 12:19 PM IST
Madurai News: மதுரையில் மாமியாரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிவிட்டு நாடகமாடிய மருமகள்! சிக்கியது எப்படி?

சுருக்கம்

 கேபிள் டிவி ஆபரேட்டர் பாக்கியராஜிக்கும் சுதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த மாமியார் மருமகளை கண்டித்துள்ளார்.

மதுரையில் 65 பவுன் நகைக்காக நடந்த மூதாட்டி கொலை செய்த சம்பவத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியாரை மருமகளே கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்துள்ளது. 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசம்மாள் (70). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ஜூலை 8ம் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் நகைகள் என மொத்தம் 65 பவுன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. நகைக்காக கொலை நடைபெற்றதாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே சந்தேகத்தின் அடிப்படையில் மருமகள் சுதாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது மாமியாரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். 

இதையும் படிங்க: illegal Love Murder:காணாமல் போன ரீஜா! பிரமோத் வீட்டுக்கு சென்ற போலீசார்! காத்திருந்த அதிர்ச்சி! நடந்தது என்ன?

இதுதொடர்பாக போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்:  கேபிள் டிவி ஆபரேட்டர் பாக்கியராஜிக்கும் சுதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த மாமியார் மருமகளை கண்டித்துள்ளார். இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக மருமகள் நடத்தை குறித்து அப்பகுதி மக்களிடம் மாமியார் காசம்மாள் கூறியுள்ளார். 

இதையும் படிங்க:  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது! உடைத்து வீசப்பட்ட செல்போன் பாகங்கள் மீட்பு!

இதை அவமானமாக எண்ணிய சுதா கள்ளக்காதலனுடன் சேர்ந்து காசம்மாளை திட்டமிட்டு கொலை செய்துள்ளார். சம்பவத்தன்றே சுதாவின் செல்போனை ஆய்வு செய்த போது பாக்கியராஜிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தபோது இருவரும் அவமானம் தாங்காமல் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாமியாரை கொலை செய்துவிட்டு மருமகள் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!