டெங்கு பாதிப்பா..? நிலவேம்பு கசாயத்தை எப்படி தயாரித்து எவ்வளவு அருந்த வேண்டும் தெரியுமா?

By thenmozhi gFirst Published Jan 4, 2019, 7:59 PM IST
Highlights

டெங்கு பாதித்தால் என்னென்ன அறிகுறிகள் இருக்கும், காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட விவரங்களை இதற்கு முன்பான பதிவில் பார்த்தோம்.

டெங்கு பாதித்தால் என்னென்ன அறிகுறிகள் இருக்கும், காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட விவரங்களை இதற்கு முன்பான பதிவில் பார்த்தோம்.

2006 ஆம் ஆண்டு, சிக்கன் குனியா பாதிப்பு அதிகமாக இருந்த போது, தமிழக அரசால் நிலவேம்பு குடிநீரை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியது.  தற்போது டெங்குவிற்கும் மிக சிறந்த மருந்தாக நிலவேம்பு கசாயம் இருப்பதால், பெரும்பாலோனோர் நிலவேம்பு கசாயத்தை அருந்த தொடங்கி உள்ளனர்.

என்னதான் மருத்துவமனைக்கு சென்று டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தாலும், கூடவே நிலவேம்பு கசாயம் குடிப்பதையும் தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை அரசும் அங்கீகரித்து உள்ளது. 

நிலவேம்பு குடிநீர் என்பது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்..

நிலவேம்பு என்பது வெறும் நிலவேம்பு இலையை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்படுவது மட்டுமல்ல. அதனுடன் வெட்டி வேர், விலாமிச்சை வேர்,பேய்புடல், பற்படாகம், சந்தனத்தூள், சுக்கு, மிளகு ஆகியவை கலந்து செய்யப்படுவதே நிலவேம்பு குடிநீர். ஆனால் ஒரு சிலர் நிலவேம்பு கசாயத்தை வெறும் நிலவேம்பு கொண்டு தயாரித்து அதனை பருகி வருகிறார்கள்.

ஆனால் இத்தனை வேர்களும் ஒன்றாக சேர்த்து தயாரிக்கப்படுவதுதான் நிலவேம்பு என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நிலவேம்பு கசாயத்தை தயாரித்த பின், எப்படி குடிக்க வேண்டும், எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

நிலவேம்பு கசாயம் தயாரித்து மூன்று மணி நேரத்திற்குள் அதை குடித்துவிடவேண்டும். நேரம் செல்ல செல்ல நிலவேம்பு கசாயத்தில் உள்ள வீரியம் குறைந்துவிடும். ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 மில்லி முதல் 60 மில்லி வரை நிலவேம்பு கசாயத்தை குடிக்கலாம்.

12 வயதிற்குள் என்றால், 30 மில்லி வரை குடிக்கலாம். காய்ச்சல் வராதவர்கள் இதுபோன்று குடித்துவரலாம். ஒருவேளை டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை நிலவேம்பு கசாயத்தை அருந்துவது சிறந்தது.

இந்த கசாயம் டெங்கு வைரஸை எதிர்த்து போராடக்கூடிய வல்லமை பெற்றுள்ளது. இதன் காரணமாக டெங்குவின் பாதிப்பு படிப்படியாக குறைந்து, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, பின்னர் டெங்கு பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடையலாம்.

click me!