18 அடி உயர நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பூஜை செய்தபோது விபரீதம்…. தவறி கீழே விழுந்து அர்ச்சகர் பலி …

By Selvanayagam PFirst Published Jan 29, 2019, 7:01 AM IST
Highlights

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு  11 அடி உயர நடைமேடை அமைத்து பூஜை செய்து கொண்டிருந்த அர்ச்சகர் வெங்கடேஷ் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததது. இந்த கோவிலில் எப்போதுமே பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதே போல் நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி வழிபட்டனர். ஆஞ்சநேயர் நிலை 18 அடி உயரம் என்பதால், அங்கே 11 அடி உயரத்தில் மேடை அமைத்து அர்ச்சகர்கள் பூஜை செய்தனர்.

இந்நிலையில் பக்தர் ஒருவர் அளித்த துளசி மாலையை விக்கிரகத்துக்கு அணிவித்துக் கொண்டிருந்த அர்ச்சகர் வெங்கடேஷ் நிலை தடுமாறி  மேலிருந்து  தலைகுப்புற விழுந்ததில் தலையில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து அவர் சேலம் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான் நிலையில் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு வெளியூர்களில் இருந்து ரத்தம் வரவழைக்கப்பட்டு அவசரமாக ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரருக்கு  தலையில் ரத்தக் கசிவு ஏற்பட ரத்தப்போக்கை நிறுத்த அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி அர்ச்சகர் வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆஞ்சநேயர் கோயிலின் வரலாற்றில் இப்படியொரு துர்சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

click me!