Agniveer: ராணுவத்தில் சேர தயாரா? என்ன செய்ய வேண்டும்... முழு விவரம் இதோ!

Published : Mar 14, 2025, 11:26 AM IST
Agniveer: ராணுவத்தில் சேர தயாரா? என்ன செய்ய வேண்டும்... முழு விவரம் இதோ!

சுருக்கம்

அக்னிவீர் திட்டத்தில் இந்திய ராணுவத்தில் சேர விரும்புகிறீர்களா? தமிழகத்தில் எங்கெல்லாம் இதற்கான முகாம் நடைபெற உள்ளது? எப்போது நடைபெறுகிறது என்ற விவரங்களும் இதோ...

Applications invited for agniveer scheme | இந்திய ராணுவம், அக்னிவீர் என்ற திட்டத்தின்கீழ் ஆட்சேர்ப்பு பணியை மேற்கொள்ளவிருக்கிறது. இதற்கான சிறப்பு முகாம்கள் தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன. மேற்கண்ட இடங்களில் நடைபெற உள்ள முகாம்கள் வாயிலாக, அக்னிவீர் திட்டத்தில் ஆட்கள் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

முகாம்கள் வாயிலாக அக்னிவீர் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, ஆரம்ப சம்பளமாக மாதம் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். இப்பணியானது 4 ஆண்டுகளுக்கான ஒப்பந்தப் பணியாகும். பணிக்காலம்  முடிந்து திரும்பும்போது விண்ணப்பதாரர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். 

அக்னிவீர் திட்டத்தில் ராணுவத்தில் சேர, யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?  இதற்கு எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.
நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் வேலை: தேர்வு இல்லை! விண்ணப்பக் கட்டணம் இல்லை

டெக்னிஷியன், ஜெனரல் டூட்டி, கிளர்க்/ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு; அக்னி வீர் டிரேட்ஸ்மேன் பணிக்கு 8 ஆம் வகுப்பு உள்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

அக்னி வீரர் திட்டத்தில் பொதுப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 10ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு எல்.எம்.வி. ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

தொழில்நுட்பப்பிரிவு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12ஆம் வகுப்பில், இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளை கொண்ட அறிவியல் பிரிவு எடுத்து படித்து இருக்க வேண்டும். 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கிளார்க் / ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பணிக்கு 10, +2 / அதாவது, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு, 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். கல்வித் தகுதி குறித்த முழு விவரங்கள்  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்து கொண்டு அதன்பின்னர் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

அக்னிவீர் திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பு: 17½ வயது முதல், 21 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 2004 ஆம் ஆண்டு, அக்டோபர் 1 முதல், 2008 ஏப்ரல்  01ஆம் தேதிக்குள் பிறந்தவர்கள் இதில் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். 

மத்திய அரசின் அக்னிவீரர் திட்டத்திற்கு வரையறுத்துள்ள விதிகளின்படி ஊதியம் தரப்படும். 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையிலானது இந்த அக்னிவீரர் திட்டம். முதல் ஆண்டில் 30 ஆயிரம், இரண்டாம் ஆண்டில் 33 ஆயிரம், மூன்றாம் ஆண்டில் 36,500, நான்காம் ஆண்டில் 40 ஆயிரம் வழங்கப்படும். ஒப்பந்த காலம் முடிந்து வெளியேறும் போது ரூ. 10.04 லட்சம் சேவா நிதியாக வழங்கப்படும்.

அக்னிவீர் திட்டத்தில், ஆன்லைனில் பொது நுழைவுத்தேர்வு (CEE), கிளர்க் / ஸ்டோர் கீப்பர் பணிக்கு டைப்பிங் டெஸ்ட் நடைபெறும். இரண்டாம் கட்டமாக ஆவண சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு (முகாம் நடைபெறும் இடத்தில்) மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை நடைபெறும்.

இப்பணிக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.250. விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.04.2025 ஆகும். ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் ஜூன் 2025 ஆகும்.

அக்னிவீர் திட்டத்தில் சென்னை மண்டலத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் நடைபெறும். 

கோவை முகாமில் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல்,நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி, தர்மபுரி; திருச்சி முகாமில் கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். 

அக்னிவீர் திட்டத்தில் சேர, www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்வையிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு.! கை நிறைய சம்பளம் - உடனே விண்ணிப்பிக்க தமிழக அரசு அழைப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 23 December 2025: ரூ.18,000க்கு குட்பை.? அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் சம்பளம்.. சுட சுட வந்த அப்டேட்
தமிழ்நாடு என்ற பெயர் திமுகவிற்கு கசக்கிறதா..? இது தான் நீங்கள் தமிழை வளர்க்கும் முறையா..? சீமான் கேள்வி