அரசியலுக்காக வெட்கமே இல்லாமல் போலி மதசார்பின்மை பேசும் ஹிந்து விரோத ஸ்டாலின்! மோடியை விமர்சிப்பதா?பாஜக விளாசல்

Published : Apr 23, 2024, 09:03 AM ISTUpdated : Apr 23, 2024, 09:06 AM IST
அரசியலுக்காக வெட்கமே இல்லாமல் போலி மதசார்பின்மை பேசும் ஹிந்து விரோத ஸ்டாலின்! மோடியை விமர்சிப்பதா?பாஜக விளாசல்

சுருக்கம்

பிரதமரின் இத்தகைய அப்பட்டமான வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சை காதில் வாங்காதது போல் இருக்கும் தேர்தல் ஆணையம் நடுநிலைமையை கைவிட்டுள்ளது.

அப்பட்டமான ஹிந்து மத வெறுப்பை நெஞ்சிலே சுமந்து கொண்டு, அரசியல் ஆதாயத்திற்காக வெட்கமின்றி போலி மதசார்பின்மை பேசும் மு.க.ஸ்டாலின் மோடியை விமர்சிப்பதா? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

பிரதமர்  மோடி நாட்டு மக்களிடையே பிரிவினையை தூண்டும் நச்சுக் கலந்த பேச்சு மிகவும் இழிவானதாக இருப்பதோடு மிகவும் வருத்தத்திற்குரியது. தனது தோல்விகளுக்கு எதிரான மக்களின் கோபத்துக்கு அஞ்சி, மத உணர்ச்சிகளை தூண்டி, வெறுப்புப் பேச்சின் மூலம் தாம் எதிர்கொண்டுள்ள தோல்வியை தவிர்க்கப் பார்க்கிறார் பிரதமர் மோடி. வெறுப்பும் பாகுபாடும்தான் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கொடுக்கும் அசலான உத்தரவாதங்கள் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: பெண் கொலை தொடர்பாக பொய்யான தகவல்.!! அண்ணாமலை மீது வழக்குப்பதிவு.. அதிரடியாக வீடியோ வெளியிட்டு பதிலடி

மேலும், பிரதமரின் இத்தகைய அப்பட்டமான வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சை காதில் வாங்காதது போல் இருக்கும் தேர்தல் ஆணையம் நடுநிலைமையை கைவிட்டுள்ளது. இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் வஞ்சகமான திசைதிருப்பும் தந்திரங்களைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும். மோடியின் மோசமான தோல்விகளை அம்பலப்படுத்தும் நமது முயற்சிகளை மேலும் உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மாநிலத் துணைத்தலைவர்  நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ஓட்டுக்காக, அது தரும் பதவிக்காக, அந்த பதவி தரும் சுகத்திற்காக, சிறுபான்மை மதத்தை சார்ந்தவர்களின்  ஓட்டுக்களை பெறுவதற்காக, ஹிந்து என்றால் திருடன் என்று சொன்னவர்கள், ஹிந்து பெண்களை விபச்சாரிகள் என்று ஹிந்து மதம் சொல்கிறது என்று சொன்னவர்கள், சொல்லிக்கொண்டிருப்பவர்கள், குங்குமத்தை பார்த்து நெற்றியில் என்ன ரத்தம் என்று கேட்டவர்கள், கோவில்களில் அசிங்கமான பொம்மைகள் இருக்கின்றன என்றவர்களோடு கூட்டணி வைத்திருப்பவர்கள், ராமன் எந்த கல்லூரியில் படித்தான் என்று எகத்தாளம் செய்தவர்கள்,  சனாதன தர்மத்தை (ஹிந்து மதத்தை) அழிப்பேன் என்று கொக்கரித்தவர்கள்.

இதையும் படிங்க:  கஞ்சா தலைநகரமாக மாறிய தமிழகம்.. குற்ற சம்பவங்களை லிஸ்ட் போட்டு திமுக அரசை விளாசும் அண்ணாமலை.!

ரம்ஜானுக்கும், கிருஸ்துமஸுக்கும் வாழ்த்து சொல்லி புளகாங்கிதம் அடைந்து, தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதை வெறுப்பவர்கள், விநாயகரை கொண்டாட தடை விதிப்பவர்கள், ராமன் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்றவர்கள், பகவான் கிருஷ்ணரை கேவலமாக பேசியவர்களோடு கொஞ்சி குலாவுபவர்கள் என அப்பட்டமான ஹிந்து மத வெறுப்பை நெஞ்சிலே சுமந்து கொண்டு, அரசியல் ஆதாயத்திற்காக வெட்கமின்றி போலி மதசார்பின்மை பேசும் மதவாத, ஹிந்து விரோத மு.க.ஸ்டாலின்  நரேந்திர மோடியை விமர்சிப்பதா? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திமுக கூட்டணியில் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!
அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!