பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்க தவறி விட்டீர்களா.? மீண்டும் ஒரு வாய்ப்பு.!! எத்தனை நாட்களுக்கு தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Jun 10, 2024, 8:07 AM IST

மாணாக்கர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு 10.06.2024 மற்றும் 11.06.2024 ஆகிய இரண்டு நாட்கள் மேலும் நீட்டிக்கப்படுகிறது என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 


பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்

உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் முக்கிய படிப்பாக திகழ்வது பொறியியல் படிப்பாகும், இந்தாண்டு 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பொறியிலில் படிப்பில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் ஆர்வமோடு விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தனர். இதனையடுத்து சம வாய்ப்பு எண் அதாவது ரேண்டம் எண் ஜூன் மாதம் 12ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், சேவை மையம் வாயிலாக சான்றிதழ்கள் சரி பார்க்கும் பணியானது ஜூன் மாதம் 13ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tap to resize

Latest Videos

மேலும் தரவரிசை பட்டியல் ஜூலை மாதம் 10 தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு அரசுப் பள்ளியில் பயின்ற சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவுக்கான கலந்தாய்வும் இதனை தொடர்ந்து பொது கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

School : ரெடியா.!! கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு- முதல் நாளிலேயே மாணவர்களுக்கு சுவீட் நியூஸ்

விண்ணப்பிக்க கால அவசாகம் நீட்டிப்பு

இந்தநிலையில், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் புதிய அறிவுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,  2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு 06.05.2024 முதல் 06.06.2024 வரை நடைபெற்றது. அதில் 2,49,918 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர் மற்றும் 2,06,012 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். தற்பொழுது மாணாக்கர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு 10.06.2024 மற்றும் 11.06.2024 ஆகிய இரண்டு நாட்கள் மேலும் நீட்டிக்கப்படுகிறது.

இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் புதிதாக விண்ணப்பத்தினை www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து. பதிவு கட்டணம் செலுத்தி, தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் தெரியப்படுத்தப்படுகிறது. செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்கம் அறிவித்துள்ளது. 

Engineering: பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை எப்போது.? விண்ணப்பம் சமர்பிக்க கடைசி நாள் என்ன.?வெளியான அறிவிப்பு

click me!