EPS vs Stalin: கும்பகர்ண தூக்கத்தில் திமுக அரசு.!அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல்-விளாசும் இபிஸ்

By Ajmal Khan  |  First Published Jun 10, 2024, 6:26 AM IST

போதைப்பொருள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடே அடையாள அட்டையாக திகழும் திமுக ஆட்சியில், பொதுமக்கள் மருத்துவ உதவி பெற வரும் அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இன்றைக்கு நிலவுகிறது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 
 


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு

தமிழகத்தில் நாள் தோறும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் கஞ்சா உள்ளிட்ட போதைகளால் நடைபெறுவதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், சென்னையில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் மருத்துவமனை உபகரணங்களை அடித்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Latest Videos

undefined

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கஞ்சா மற்றும் கொலை வழக்கில் கைது செய்ததற்கு எதிர்ப்பாக ரவுடி கும்பல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கண்ணாடிகளை சேதப்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. போதைப்பொருள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடே அடையாள அட்டையாக திகழும் இந்த விடியா திமுக ஆட்சியில், பொதுமக்கள் மருத்துவ உதவி பெற வரும் அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இன்றைக்கு நிலவுகிறது.

தமிழக வெற்றி கழகத்திற்கு 2026 தான் இலக்கு: புஸ்ஸி ஆனந்த்!

அரசு மருத்துவமனையில் ரவுடிகள் அட்டகாசம்

இந்த விடியா திமுக அரசின் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு குறித்து பல்வேறு முறை சுட்டிக்காட்டி வந்தும், அதனை சீர்செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கேளாதார் காதில் சங்கு ஊதிய கதையாக கும்பகர்ண தூக்கத்தில் உள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். சேதமடைந்த மருத்துவ உபகரணங்களை உடனடியாக சீர்செய்வதுடன், தாக்குதல் நடத்திய ரவுடி கும்பல் மீது தக்க சட்ட நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டு, இனியாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.

மதச்சார்பற்ற தன்மையை தொடர்வீர்கள்.. மாநில உரிமைகளை மதிப்பீர்கள் என நம்புகிறோம்.. மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து

click me!