பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வெழுத மீண்டும் வாய்ப்பு... சுற்றறிக்கை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!!

By Narendran SFirst Published Mar 17, 2023, 4:37 PM IST
Highlights

12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாத மாணாவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாத மாணாவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 13 ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. அதில் முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாட தேர்வை சுமார் 50,000 மாணவர்கள் எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்தது. இந்த நிலையில் தேர்வெழுதாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 24, ஏப்.10, ஏப்ரல் 24 ஆகிய தேதிகளில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த பள்ளிக்கல்வித்துறையின் மாநில திட்ட இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதுமட்டுமின்றி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்காத நிலையில் மேலாண்மை குழுக்கூட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கோவை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கோடை மழை

மேலும் அதில், 12 ஆம் வகுப்பு தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் விவரங்களை கண்டறிய வேண்டும். மாணவர்களின் விவரங்களை சேகரித்து உரிய ஆலோசனை வழங்கி துணைத்தேர்வில் பங்கேற்க வைக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பொதுத்தேர்வு முக்கியத்துவம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை அனைத்து மாணவர்களும் எழுதுவதை பள்ளி மேலாண்மை உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்களை சிறப்பு பயிற்சி மையங்களுக்கு அழைத்து வர வேண்டும்.

இதையும் படிங்க: அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்; தமிழகத்தை தொடர்ந்து புதுவையில் அமல்

மாணவர்களின் பெற்றோருக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டியுள்ளது. மொழித் தேர்வை எழுதாத மாணவர்களை பிற தேர்வுகள் எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலைக்காக பெற்றோர் இடம்பெயர்தல் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாதது தெரிய வந்தது. அச்சம் காரணமாக தேர்வுக்கு வரமுடியாத மாணவர்களையும் அடையாளம் கண்டு அச்சம் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத வைக்கும் வகையில் பெற்றோர் ஒத்துழைப்பு கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. மொழிப்பாடத் தேர்வை எழுதாத மாணவர்களை பிற தேர்வுகளை எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!