End to Annual Fishing Ban: இன்றுடன் முடிவடைகிறது மீன்பிடித் தடைக்காலம்.. தயார் நிலையில் 8 ஆயிரம் மீனவர்கள்..

By Thanalakshmi VFirst Published Jun 13, 2022, 3:33 PM IST
Highlights

தமிழகத்தில்‌ மீன்பிடித்‌ தடைக்காலம்‌ இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதனால் ராமநாதபுரம்‌ மாவட்டத்தில்‌ மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில்‌ 8 ஆயிரத்திற்கும்‌ மேற்பட்ட மீனவர்கள்‌ மீன்பிடிக்க செல்ல தயார் நிலையில் உள்ளனர்.
 

தமிழகத்தில்‌ மீன்பிடித்‌ தடைக்காலம்‌ இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதனால் ராமநாதபுரம்‌ மாவட்டத்தில்‌ மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில்‌ 8 ஆயிரத்திற்கும்‌ மேற்பட்ட மீனவர்கள்‌ மீன்பிடிக்க செல்ல தயார் நிலையில் உள்ளனர்.
தமிழகத்தில்‌ மீன்களின்‌ இனபெருக்க காலமாக கருதப்படும்‌ ஆண்டுதோறும்‌ ஏப்ரல்‌ 15 முதல்‌ ஜூன்‌ 14 வரை 61 நாள்கள்‌ விசைப்படகுகளில்‌ மீன்பிடிக்க செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராமேசுவரம்‌, பாம்பன்‌, மண்டபம்‌, கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் தங்களது விசைபடகுகளை சீரமைப்பு பணிகளில் ஈடுப்பட்டனர். 

மேலும் படிக்க: பள்ளிகள் திறப்பு.. மாணவர்களுக்கு TC வழங்குவதில் தாமதம் கூடாது.. அரசுப்பள்ளிகளுக்கு உத்தரவு..

இந்நிலையில் தற்போது தடைக்காலம்‌ இன்று நள்ளிரவு நிறைவடைகிறது. இதனால் நாளை மீன்பிடித் துறைமுகங்களில்‌ இருந்து மொத்தம் 1,750 விசைப் படகுகளில் 8 ஆயிரத்திற்கும்‌ மேற்பட்ட மீனவர்கள்‌ மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர்‌. ராமேசுவரம்‌ துறைமுகத்தில்‌ இருந்து 700 க்கும்‌ மேற்பட்ட படகுகள்‌ மீன்பிடிக்க செல்ல உள்ளதாக தெரிகிறது.

மீன்பிடிக்க செல்வதற்கு ஏதுவாக மீனவர்கள், கரையில்‌ ஏற்றப்பட்ட விசைப்படகுகளை‌ கடலுக்குள்‌ இறக்கி வருகின்றனர்‌. மேலும்‌, மீன்பிடிக்க செல்வதற்கு தேவையாக டீசல்‌, வலைகள்‌, உணவுப்பொருட்கள்‌,மற்றும்‌ ஐஸ்‌ கட்டிகள்‌ வாங்கி படகுகளுக்கு கொண்டு செல்லும்‌ பணியில்‌ மீனவர்கள்‌ தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்‌.

மேலும் படிக்க: உஷார் மக்களே!! தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.. 18 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்..

click me!