உஷார் மக்களே!! தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.. 18 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்..

Published : Jun 13, 2022, 02:48 PM IST
உஷார் மக்களே!! தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.. 18 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்..

சுருக்கம்

தமிழகத்தில் நாளை மறுநாள் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,” மேற்கு இசை காற்று மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக,

13.06.2022. 14.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌.

15.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம்‌, நாமக்கல்‌, திருச்சி, பெரம்பலூர்‌, புதுக்கோட்டை மற்றும்‌ கரூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

16.06.2022. 17.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்குற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

13.06.2022. 15.06.2022. 16.06.2022. 17.06.2022: இலட்சத்தீவு பகுதி மற்றும்‌ அதனை ஓட்டிய குமரிக்கடல்‌ பகுதி, கேரளா - கர்நாடக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌, மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌
சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 6 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

14.06.2022: கர்நாடக கடலோரப்பகுதி, அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌, ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தலைகுப்புற கவிழ்ந்த சரக்கு லாரி.. நொறுங்கிய 50 லட்சம் மதிப்பிலான குவாட்டர் பாட்டில்கள்.. குமுறும் குடிமகன்கள்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live Today 18 January 2026: ஒன் லாஸ்ட் டைம்... ஒரே நாளில் மோதும் விஜய் - அஜித் படங்கள்; என்ன நண்பா தல - தளபதி கிளாஷுக்கு ரெடியா?
தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்