தலைகுப்புற கவிழ்ந்த சரக்கு லாரி.. நொறுங்கிய 50 லட்சம் மதிப்பிலான குவாட்டர் பாட்டில்கள்.. குமுறும் குடிமகன்கள்

Published : Jun 13, 2022, 02:02 PM IST
தலைகுப்புற கவிழ்ந்த சரக்கு லாரி.. நொறுங்கிய 50 லட்சம் மதிப்பிலான குவாட்டர் பாட்டில்கள்.. குமுறும் குடிமகன்கள்

சுருக்கம்

கோவை மாவட்டம் சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் உள்ள கொச்சின் பைபாஸ் சாலையில், பூந்தமல்லியில் இருந்து பீலமேடு பகுதிக்கு மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி சென்றுக்கொண்டிருந்தது. அதிகாலை 4 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி தலைகீழாக கவிழ்ந்தது. 

கோவை அருகே விபத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த லாரியில் ஏற்றி வரப்பட்ட 50 லட்சம் மதிப்பிலான குவாட்டர் பாட்டில்கள் முற்றிலும் சேதமடைந்தன. 

கோவை மாவட்டம் சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் உள்ள கொச்சின் பைபாஸ் சாலையில், பூந்தமல்லியில் இருந்து பீலமேடு பகுதிக்கு மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி சென்றுக்கொண்டிருந்தது. அதிகாலை 4 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி தலைகீழாக கவிழ்ந்தது. 

இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார். ஆனால் லாரியில் இருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,200 மதுபாட்டில்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. இதனையடுத்து, அவ்வழியாக  சென்ற மதுப்பிரியர்கள் பலர் கவிழ்ந்து கிடந்த லாரியையும், உடைந்து கிடந்த மதுபாட்டில்களையும் பரிதாபமாக பார்த்துச் சென்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்
கரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்