பள்ளிகள் திறப்பு.. மாணவர்களுக்கு TC வழங்குவதில் தாமதம் கூடாது.. அரசுப்பள்ளிகளுக்கு உத்தரவு..

By Thanalakshmi VFirst Published Jun 13, 2022, 1:43 PM IST
Highlights

TC ( மாற்றுச் சான்றிதழ் ) வழங்குவதில் தாமதமும், தடையும் கூடாது என்று அரசுப் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, கோடை விடுமுறைக்குப் பின் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 5, 8, 10, 12 ஆம் வகுப்புகள் முடித்த மாணவர்களுக்கு தாமதமின்றி TC வழங்கிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 
 

TC ( மாற்றுச் சான்றிதழ் ) வழங்குவதில் தாமதமும், தடையும் கூடாது என்று அரசுப் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, கோடை விடுமுறைக்குப் பின் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 5, 8, 10, 12 ஆம் வகுப்புகள் முடித்த மாணவர்களுக்கு தாமதமின்றி TC வழங்கிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும் இதர வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்கள் தாமாக முன்வந்து TC கோரினால், அவற்றை தடையின்றி வழங்கிட வேண்டும் என்றும் அனைத்து அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. TC வழங்கும் பணிகளை இன்றும் , நாளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Tamilnadu School Reopens: அரசு பள்ளி மாணவர்களை வரவேற்ற மோட்டு பட்லு..! நடனமாடி மகிழ்ந்த சிறுவர்கள்

இதனிடையே அரசுப் பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கையும் தொடங்கும் நிலையில், 8-ம் வகுப்பு வரை சேர முன்வரும் மாணவர்களிடம் TC இல்லாவிட்டாலும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படி சேரும் மாணவர்களின் முந்தைய பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் பெற்று அதை சமர்பித்த பிறகு, முறையாக பதிவேட்டில் தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்றும் அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. 

இதுமட்டுமல்லாமல் கட்டாய கல்வி உரிமை( RTE)  சட்டத்தின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றின் கீழ் சேர முன்வரும் குழந்தைகளையும் தடையின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க: பள்ளிக்கு திடீர் விசிட்.. மாணவர்களோடு அமர்ந்து பாடம் கேட்ட முதல்வர்.. நடந்த சுவாரஸ்யமான சம்பவம்..

click me!