A டீம் என்கிற திமுக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தான் பீ.டீமாக இருக்கக்கூடிய அதிமுக தேர்தலில் போட்டியிடாமல் இருக்கிறார்கள் என தெரிவித்த அண்ணாமலை, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் வாயிலாக இதனை மறுபடியும் அதிமுக நிரூபித்து இருக்கிறார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டியில் இன்று பிரச்சாரம்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள பாஜக பிரமுகர் இல.கண்ணன் இல்ல நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து இன்று மாலை எங்களது கூட்டணியின் சார்பில் அனைவரும் ஒன்று சேர்ந்து விக்கிரவாண்டியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். கள்ளக்குறிச்சி விவகாரம் தேர்தலில் எதிரொலிக்கும் என நம்புகிறோம். கள்ளக்குறிச்சியை பொருத்தவரை அது கள்ளச்சாராய கொலை என்று தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இடைத்தேர்தல் என்றாலே எப்போதும் ஆளும் கட்சி உடைய ஆதிக்கம் அதிகம் இருக்கும். அதனை நாம் தற்போது விக்கிரவாண்டியில் பார்க்க முடிகிறது - ஒரு இடைத்தேர்தல் எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
undefined
Vijay Speech : திமுகவுடன் கைகோர்த்த விஜய்... எதற்காக தெரியுமா? பரபரக்கும் தமிழக அரசியல் களம்
அதிமுக அழிய காரணம் ஜெயக்குமார்
A டீம் என்கிற திமுக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தான் பீ.டீமாக இருக்கக்கூடிய அதிமுக தேர்தலில் போட்டியிடாமல் இருக்கிறார்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் வாயிலாக இதனை மறுபடியும் அவர்கள் நிரூபித்து இருக்கிறார்கள்.அதிமுகவை பொறுத்தவரை அந்த கட்சி அழிவதற்கு பல பேர் காரணம் என்றால் ஜெயக்குமார் முதல் காரணம். காலையிலும் மாலையிலும் லுங்கி கட்டிக்கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பை வைத்தால் ஜெயக்குமார் அரசியல் செய்துவிட முடியுமா என்றார்.நடிகர் விஜய்யின் கருத்து குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், கருத்து சொல்வது அவரவர் சுதந்திரம் அவருடைய கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். ஆதாரத்தின் அடிப்படையில் நீட் யாருக்கும் எதிரானது அல்ல என்பதனை 2016 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் தொடர்ந்து நிருபித்து வருகிறோம்.
பாஜக தனித்து நிற்கும்
அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் ஒரு கருத்து கூறும் போது அறிவியல் பூர்வமாக ஆதாரத்துடன் அதனை வெளியிடுவது தான் சரியாக இருக்கும். பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக நீட்டை காரணமாக வைத்து வண்டியை ஓட்டி விடுகிறார்கள். திமுக எடுத்திருக்கிற கொள்கை முடிவை சார்ந்து விஜய் தன்னுடைய அரசியலில் பயணிப்பாரே ஆனால் தமிழகத்தில் பாஜக மட்டும் தனித்து நிற்கும். பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் மட்டும் தனித்திருக்கும் அது எங்களுக்கு இன்னும் சந்தோசம் தான். அரசியல் கட்சித் தலைவராக விஜய் உடைய கருத்தை நான் வரவேற்பேன் என்று தான் சொல்ல வேண்டும் - ஏனென்றால் எங்களுக்கு அது நல்லது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.